இத்தாலி வழியாக பிரான்ஸ் செல்ல முற்பட்ட நானூறுக்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தவர்களை இத்தாலி காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
பிரான்ஸ் – இத்தாலியை தரைவழியாக இணைக்கும் எல்லையான வென்டிமிக்லியா(ventimiglia) வழியே நானூறுக்கும் மேற்பட்டோர் ஒன்றாக சேர்ந்து பிரான்சுக்குள் செல்ல முற்பட்ட வேளை இத்தாலிக் காவல்துறையினர் தடுத்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து அவர்கள் அருகில் உள்ள ஆற்றில் குதித்து பிரான்ஸ் எல்லைக்குள் செல்ல முயன்றதனைத் தொடர்ந்து காவல்துறையினருக்கும் அவர்களுக்குமிடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து அவர்கள் மீது இதனால் கண்ணீர் புகைப் பிரயோகம் மேற்கொண்டு அவர்களை கட்டுப்படுத்தியதுடன் கைது செய்தனர்.
உள்நாட்டுபோர் மற்றும் வறுமை காரணமாக ஆசிய ஆப்பிரிக்கா நாட்டினர் பலர் புலம்பெயர்ந்து ஐரோப்பிய நாடுகளுக்கு செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
http://www.jvpnews.com/europe/04/129706

Geen opmerkingen:
Een reactie posten