ஜேர்மனியின் Mühlhausen நகரில் அமைந்துள்ள ரயில் நிலையம் அருகே குறித்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. கடந்த 2016 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் இப்பகுதியில் நடந்த விழா ஒன்றில் கலந்து கொண்ட 28 வயது Laura G ரயில் நிலையம் நோக்கி நடந்து வந்துள்ளார்.
அப்போது அவரை வழிமறித்து தாக்கிய ஒரு கும்பல் அவரது மொபைல் போனை கைப்பற்றியுள்ளது. 3 பேர் கொண்ட அந்த கும்பலிடம் இருந்து தப்பிக்கும் பொருட்டு ஓட்டமெடுத்த அவரை தாக்கி, அவரது கூந்தல் முடியில் பிடித்து இழுத்து சென்று 3 பேரும் 9 முறை வன்புணர்வில் ஈடுபட்டுள்ளனர்.
மட்டுமின்றி குறித்த கொடூர சம்பவத்தை அவரது மொபைலில் காணொளியாக பதிவும் செய்துள்ளனர். இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட Laura G ஹங்கேரி நாட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், குறித்த பெண்ணால் அடையாளம் காட்டப்பட்ட அந்த 3 பேர் கொண்ட கும்பலானது எத்தியோப்பிய புகலிடம் கோரிக்கையாளர்கள் எனவும் தெரிய வந்துள்ளது.
தம்மிடம் அந்த கும்பல் மிகவும் கொடூரமான முறையிலும் மிகவும் அருவருப்பாகவும் நடந்து கொண்டதாக கண்ணீருடன் தெரிவித்த அப்பெண்,
அவர்களிடம் இருந்து தப்பிக்க முயற்சித்த போதெல்லாம் கொடூரமாக தாம் தாக்கப்பட்டதாகவும், எழுந்து தப்பிக்க முடியாதவகையில் இருவர் தரையோடு அழுத்திப் பிடித்திருந்ததாகவும் அவர் நீதிமான்றத்தில் தெரிவித்துள்ளார்.
ஆனால் குறித்த நபர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் Isaak N என்பவர் குற்றத்தை ஒப்புக்கொண்டதுடன், இருவரும் புரிதலுடன் மட்டுமே குறித்த பெண்ணுடன் உறவில் ஏற்பட்டதாகவும் அவர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
மட்டுமின்றி குற்றஞ்சாட்டப்பட்டிருக்கும் எஞ்சிய இருவருக்கும் இந்த வழக்கில் தொடர்பில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆனால் இந்த வழக்கு தொடர்பில் பொலிசார் சேகரித்துள்ள டி.என்.ஏ மாதிரியும் அவர்கள் இருவரது டி.என்.ஏ.வும் ஒத்திருப்பதாக பொலிஸ் தரப்பு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
வரும் நாட்களில் இந்த வழக்கின் விசாரணை மேலும் நடைபெறும் என்று Mühlhausen நீதிமன்றம் அறிவித்துள்ளது.
http://news.lankasri.com/germany/03/127392?ref=lankasritop
Geen opmerkingen:
Een reactie posten