பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள நோட்ரே டேமில் பொலிஸார் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. இதனையடுத்து பதிலுக்கு பொலிஸார் மேற்கொண்ட தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
இத் தாக்குதலில் இரண்டு பொலிஸார் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்த பொலிஸார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை தகவல் அறிந்த பொலிசார் அந்த பகுதியை சுற்றி வளைத்துள்ளனர். அப்போது பொலிசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அந்நபர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இதனால் அப்பகுதிகளில் உள்ள பொதுமக்கள் வெளியேற வேண்டாம் என பொலிசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில் அந்தப் பகுதியில் 2000 மேற்பட்ட சுற்றுலா பயணிகள் தங்கியுள்ளனர். இதையடுத்து பாரீஸ் நகர் முழுவதும் பலத்த பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தொடர்ந்து அங்கு பொலிசார் சோதனை நடத்தி வருகின்றனர்.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் லண்டன் நகரில் நடந்த தாக்குதலில் ஏழு பேர் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/world/01/148219
Geen opmerkingen:
Een reactie posten