குறித்த இலங்கை இளைஞர்கள் பேருந்துக்காக காத்திருந்த மாணவிகளிடம் கேலி கிண்டல் என அத்துமீறி செயற்பட்டதுடன், சத்தியமங்கலம் செல்லும் பேருந்தில் மாணவிகள் ஏறிய போதும் குறித்த இளைஞர்கள் தமது அநாகரீக செயற்பாட்டை நிறுத்துவதாக இல்லை.
தொடர்ந்து மாணவிகளிடம் அத்துமீறி செயற்பட்டுள்ளனர். இதன்போது தடுக்க வந்த பேருந்தின் நடத்துனரை எச்சரித்ததுடன், வாளால் வெட்டுவதற்கும் முயற்சித்துள்ளனர்.
பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரும் குறித்த இளைஞர்களை விரட்டியதால் அவர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.
தொடர்ந்து குறித்த இலங்கைத் தமிழ் இளைஞர்கள் ஐவருக்கு எதிராக பவானிசாகர் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
பொலிஸாரின் தேடுதலில் இலங்கை தமிழர் முகாமைச் சேர்ந்த மகேஷ்குமார் என்ற இளைஞன் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
ஏனைய நால்வரையும் பொலிஸார் தேடிவருகின்றனர் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
http://www.tamilwin.com/community/01/148930
Geen opmerkingen:
Een reactie posten