தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 30 juni 2017

உச்சமடையும் மோதல்! சீ.விக்கு பகிரங்க சவால் விடுக்கும் சுமந்திரன்

வடமாகாண முதலமைச்சர் மாகாண சபையை கலைத்துவிட்டு தேர்தலை நடத்திப் பார்க்கட்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தலை நடத்துவதன் மூலம் மக்கள் யாருடன் இருப்பார்கள் என்பது தெரியவரும் எனவும் அவர் கூறியுள்ளார். ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், "முதலமைச்சரின் வீட்டிற்கு முன்னால் உள்ள வீதி ஒடுக்கமானது. அதில் 100 பேர் இருந்தாலும் பாரிய ஜனப்பிரளயம் போன்றே தென்படும்.
அதனைக் கண்டு தனக்கு மக்கள் சக்தி இருக்கின்றது என முதலமைச்சர் நினைக்க வேண்டாம். அவ்வாறு நினைப்பாராக இருந்தால் மாகாண சபையை கலைத்துவிட்டு தேர்தலை நடத்தி பார்க்கட்டும்.
தேர்தலை நடத்துவதன் மூலம் மக்கள் யாருடன் இருப்பார்கள் என்பது தெரியவரும். முதலமைச்சர் மீது நம்பிக்கை வந்து விட்டது என்று யாரும் கடிதம் கொடுக்கவில்லை.
ஆகையினால் தான் நானே கூறுகின்றேன் "நம்பிக்கை இழந்தவர் நம்பிக்கை இழந்தவராகத்தான்" இருக்கின்றார். இந்நிலையில், அந்த பிரேரணையை முன்கொண்டு செல்லவில்லை என்றே கடிதம் கொடுக்கப்பட்டிருகின்றது.
இதேவேளை, முதலமைச்சரின் சில செயற்பாடுகள் மீண்டும் பிரச்சினையை வளர்க்கும் வகையில் அமைந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten