தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 22 juni 2017

நம்பிக்கையில்லா தீர்மானத்தையும் கடந்து வடக்கு முதல்வரை கடுமையாக தண்டிக்க வேண்டும் : பொன்சேகா

வடக்கு முதல்வர் இனவாதக் கருத்துக்களை வெளியிட்டு மக்களை தூண்டி விட்டால் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தையும் தாண்டி சென்று மேலதிக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா கூறியுள்ளார்.
கடவத்த ரன்முதுகலையில் விகாரை ஒன்றில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதை கூறினார். தொடர்ந்து தெரிவிக்கையில்,
இராணுவ வீரர்களின் அர்ப்பணிப்பிலேயே வடக்கு மக்களுக்கு தற்போது சுதந்திரம் கிடைத்துள்ளது. அதற்கு பாதகம் ஏற்படுத்தும் வகையில் எவரேனும் செயற்பட்டால் அதற்கு கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டார்.
இந்த நிலையில் வடக்கு முதலமைச்சர் சீ்.வி.விக்னேஸ்வரன் இனவாத கருத்துக்களை தூண்டிவிட முயற்சித்தால் அதை தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்க வேண்டும்.
அதற்கு அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் மட்டும் அல்ல அதையும் தாண்டிச் சென்று மேலதிக நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/politics/01/149801

Geen opmerkingen:

Een reactie posten