தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 13 juni 2017

வந்த விமானத்தில் தமிழரை திருப்பி அனுப்பிய இந்தியா!! வெளியான காரணம்

சிங்கப்பூரில் இருந்து நேற்று அதிகாலை 2.30 மணிக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் வந்திறங்கியது. அதில் வந்த பயணிகளிடம் குடியுரிமை அதிகாரிகள், சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
அப்ேபாது சிங்கப்பூரில் இருந்து வந்த செல்வநாயகம்(46) என்பவரின் பாஸ்போர்ட் விவரங்களை கணினியில் பதிவு செய்தபோது, அவர் விடுதலைப்புலி ஆதவாளர் என்பதும், இந்தியாவுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டவர் என்பதும் தெரிய வந்தது.
அதையடுத்து அவரை தனி அறையில் அமர வைத்த குடியுரிமை அதிகாரிகள் சென்னையில் உள்ள குடியுரிமைத்துறை அலுவலகத்துக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் டெல்லியில் உள்ள அதிகாரிகளுக்கு அது தொடர்பாக தெரிவித்தனர்.
இதனிடையே, செல்வநாயகம் தான் விடுதலைப்புலி ஆதரவாளர் அல்ல என்றும் சிங்கப்பூரில் வசித்து வருவதாகவும் வாதிட்டார். ஆனால் எந்த விமானத்தில் வந்தாரோ அதே விமானத்தில் அவரை திருப்பி அனுப்ப டெல்லியில் இருந்து உத்தரவிடப்பட்டது.
அதைதொடர்ந்து இன்று (13ம் தேதி) காலை 5.30 மணிக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் செல்வநாயகத்தை மீண்டும் சிங்கப்பூர் திருப்பி அனுப்பும் நடவடிக்கைகளை குடியுரிமை அதிகாரிகள் ஏற்பாடு செய்தனர்.
http://www.jvpnews.com/india/04/128679

Geen opmerkingen:

Een reactie posten