தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 26 oktober 2011

கடாபியின் சொந்த ஊரில் குண்டு வெடிப்பு: 100பேர் இறந்தனர் !

25 October, 2011
லிபிய அதிபர் கடாபி அவரது சொந்த ஊரான சேட்டில் தங்கியிருந்தவேளை அந் நகரை முற்றுகையிட்ட கிளர்ச்சிப்படையினர் அவரை உயிருடன் பிடித்து பின்னர் சுட்டுக்கொன்றனர். அவரது மகனையும் உயிருடன் பிடித்து சுட்டுக்கொலை செய்யப்பட்டதும் யாவரும் அறிந்ததே. இந் நிலையில் நேற்றைய தினம் பாரிய எண்ணை தாங்கி கொள்கலன் ஒன்றும் குண்டு வைத்து தகர்க்கப்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட பெருவெடிப்பால் அந் நகரில் உள்ள சுமார் 100 பேர் இறந்துள்ளனர். மேலும் 50 பேர் காயமடைந்துள்னர் எனவும் அறியப்படுகிறது. கடாபி தன் பிறந்து வழர்ந்த "சேட்" என்னும் நகரை மிகவும் முன்னேற்றி வைத்திருந்தார். அங்கே பல வீடுகள் கட்டப்பட்டும் மற்றும் வணிக ரீதியாகவும் அந் நகர் சிறந்து விளங்கியது.

ஆனால் இறுதி நேரத்தில் நடந்த போரில் இந் நகரம் சுடுகாடாக மாறியுள்ளது. அந் நகரில் உள்ள 90 சதவீதமான கட்டிடங்கள் அழிக்கப்பட்டுள்ளதோடு மேலும் அழிவை ஏற்படுத்தும் விதத்தில் எண்ணைதாங்கிக் கொள்கலன் வெடிக்கவைக்கப்பட்டுள்ளது. இதில் வேதனைக்குரிய விடையம் என்னவென்றால் கடாபியின் சொந்த இடமான சேட் என்னும் நகரை இனி மீளவும் கட்டி எழுப்பக்கூடாது என்றும் அந் நகர மக்களை லிபிய நாட்டவராகக் கருதக்கூடாது என்றும் கிளர்ச்சிப்படை சொல்லிவருகிறது. உடைந்த கட்டிடங்கள் அப்படியே இருக்கவேண்டும் எனவும் புதிதாக எக்கட்டிடத்தையும் கட்டக்கூடாது என்ற கட்டுப்பாடுகள் போடப்பட்டுள்ளதாம்.

கடாபியைப் பழிவாங்கிய கிளர்ச்சிப் படையின் அவர் சொந்த ஊர் மக்களையும் தற்போது பழிவாங்க ஆரம்பித்துள்ளனர். இது எந்த வகையில் ஞாயம் எனத் தெரியவில்லை.

Geen opmerkingen:

Een reactie posten