மீறல்கள்
தொலைக்காட்சி
தொலைக்காட்சி
woensdag 26 oktober 2011
அவுஸ்திரேலிய தடுப்புமுகாமில் ஈழத்தமிழர் தற்கொலை
ஈழத்தமிழ் இளைஞர் ஒருவர் சிட்னி தடுப்புமுகாமில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
சிட்னி குடிவரவு வதிவிட வீடமைப்புத் தொகுதியில், நஞ்சருந்திய நிலையில் மீட்கப்பட்ட இவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போது உயிரிழந்ததாக அவுஸ்திரேலிய குடிவரவுத் திணைக்களம் அறிவித்துள்ளது.
இன்று அதிகாலை 3 மணியளவில் இவர் மரணமாகியுள்ளார்.
இவரது மரணம் இடம்பெற்ற சூழல் தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என்று அவுஸ்திரேலிய காவல்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
வில்லாவூட் தடுப்பு முகாமில் கடந்த ஆண்டு அடுத்தடுத்து நிகழ்ந்த நான்கு தற்கொலைகளை அடுத்து கூரை மீதேறி போராட்டம் நடத்தியவர்களில், இன்று மரணமான இளைஞரும் ஒருவராவார்.
சூட்டி என்று நண்பர்களால் அழைக்கப்பட்ட இவர் அனைவருடனும் நட்புடன் பழகக் கூடியவர் என்றும் அனைவருக்கும் உதவும் மனப்பாங்குடையவர் என்றும் அகதிகளுக்கான நடவடிக்கை கூட்டமைப்பின் பேச்சாளர் இயன் றின்ரோல் தெரிவித்துள்ளார்.
26 Oct 2011
Geen opmerkingen:
Een reactie posten
Nieuwere post
Oudere post
Homepage
Abonneren op:
Reacties posten (Atom)
Geen opmerkingen:
Een reactie posten