04 October, 2011
இராணுவத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடந்த போரின்போது காயப்பட்ட மற்றும் சரணடைந்த ஏராளமான புலிகள் உறுப்பினர்களை இராணுவம் கொண்றுவிட்டு அடையாளங்களை அழிப்பதற்காக அவர்களை பெற்றோல் ஊற்றிக் கொழுத்தியதக பல தகவல்கள் முதலில் வெளியாகியிருந்தது யாவரும் அறிந்ததே. இதனை நேரில் பர்த்த பொதுமக்கள் பலர் வாய்வழியாகக் கூறிய செய்திகளே இதுவரை வெளியாகியபோதும் அதற்கான புகைப்படங்களோ இல்லை வீடியோக்களோ இதுவரை வெளியாகியிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் தற்போது இலங்கை அரசின் இணையத்தளத்தில் இருந்து தற்செயலாக வெளியான இப் புகைப்படங்கள் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
அதாவது விடுதலைப் புலிகள் போராளிகள் அணியும் வரிப்புலி சீருடையுடன் காணப்படும் ஒரு சடலம் எரிந்துகொண்டு இருக்கும் நிலையில் இருப்பது இப் புகைப்படத்தில் உள்ளது. இப் புகைப்படத்தை 2007ம் ஆண்டு எடுத்ததாக பாதுகாப்பு இணையம் தெரிவித்துள்ள போதும் இவை அதற்கு பிற்பட்ட காலப்பகுதியில் எடுத்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. கைகள் இரண்டையும் ஒரு தடியில் கட்டி பின்னர் அச் சடலம் எரியூட்டப்பட்டுள்ளது. பொதுவாக இறந்த போராளிகளை விடுதலைப் புலிகள் இவ்வாறு எரிப்பதும் இல்லை. அவர்களுக்கு தகுந்த மரியாதை கொடுத்து அடக்கம் செய்வதே வழக்கம். எனவே இது நிச்சயம் இலங்கை இராணுவத்தின் அடுத்த காட்டுமிராண்டித்தனமான செயலாகவே இருக்கும் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
அத்தோடு எரியூட்டப்பட்டு காணப்படும் சடலத்தில் உள்ள தடியானது, வெறும் மரம் அல்ல என்றும் அது காயப்பட்ட போராளிகள் ஊண்றி நடக்க பாவிக்கப்படும் உதவுகோல் என்றும் இப் புகைப்படத்தை பகுப்பாய்வு செய்த போராளி ஒருவர் அதிர்வு இணையத்துக்கு தெரிவித்தார். எனவே நிச்சயம் காயப்பட்ட போராளி ஒருவரை இராணுவம் உயிருடன் அல்லது இறந்த பின்னர் தீயிட்டுக் கொழுத்தும் காட்சியே இவை என நம்பப்படுகிறது. மேலும் புதுமாத்தளானை இலங்கை இராணுவத்தின் 58வது படையணி கைப்பற்றியபோது அங்கே காயப்பட்டு இருந்த நூற்றுக்கணக்கான போராளிகள் டாஸ்க் -போஸ் 7 என்னும் படைப்பிரிவினரிடம் சிக்கியுள்ளனர். இவர்கள் அனைவருக்கும் என்ன ஆனது என்பதும் இதுவரை தெரியவில்லை என அப் போராளி மேலும் தெரிவித்துள்ளார்.
அங்கே காயப்பட்டு இருந்த போராளிகளில் ஒருவரைக் கூட தாம் புணர்வாழ்வு முகாமில் கண்டது இல்லை எனவும் அவர்கள் அனைவரையும் இலங்கை இராணுவத்தினர் கொலைசெய்திருக்கலாம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். இது தவிர போராளிகள் பலரை இலங்கை இராணுவம் கொலைசெய்து பின்னர் தீயிட்டுக் கொழுத்தியதை சில சிப்பாய்கள் மோபைல் போனில் படம்பிடித்ததாகவும் இந்த வீடியோக்களும் விரைவில் வெளிவரும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
குறிப்பு: இப் புகைப்படங்கள் எடுக்கப்பட்ட தேதியை மற்றும் இடங்களை சுயாதீனமாக உறுதிசெய்ய முடியவில்லை என்பதனையும் அறியத்தருகிறோம்:
Geen opmerkingen:
Een reactie posten