[ புதன்கிழமை, 19 ஒக்ரோபர் 2011, 03:43.05 AM GMT ]
இலங்கையின் வன்னிப் பகுதியில் இடம்பெற்ற இறுதிக்கட்ட நடைபெற்றவேளை அவுஸ்திரேலிய தமிழ் பிரஜையான திருமதி மீனா கிருஷ்னமூர்த்தி தனது நேரடிச் சாட்சியத்தைப் பதிவு செய்துள்ளார்.
அவருடன் டாக்டர் சாம்பவியும் இணைந்து அவுஸ்திரேலியாவில் 3 பேருக்கு எதிராக வழக்கு தொடுக்க முனைப்புகளைக் காட்டியுள்ளனர். இதனை அவுஸ்திரேலியாவின் முன்னணி தேசிய தொலைக்காட்சியான எ.பி.சி ஒளிபரப்பியுள்ளது. சுமார் 9 நிமிடம் ஒளிபரப்பப்பட்ட இந்தக் காணொளியால் அவுஸ்திரேலிய மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மீனா தனது அனுபவத்தை விவரிக்கையில் தாம் முள்ளிவாய்க்கால் வரை சென்று எவ்வாறு உயிர்பிழைத்தேன் எனக் கூறியுள்ளார். வைத்தியசாலைகளை நோக்கி இலங்கை இராணுவம் ஏவிய ஏவுகணைகள் தொடக்கம் கடலில் நின்ற இலங்கைக் கடற்படையினர் தம் மீது தாக்குதல் நடத்தியது தொடக்கம் இவர் விவரித்துள்ளர்.
இலங்கையின் முன்நாள் கடற்படை தளபதி தற்போது அவுஸ்திரேலியாவுக்கான இலங்கைத் தூதுவராக இருக்கிறார். இவருக்கு எதிராகவும் இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய இரட்டைக் குடியுரிமை பெற்ற பாலித கோகன்னவுக்கும் எதிராகவும் மற்றும் தற்சமயம் அவுஸ்திரேலியா செல்லவிருக்கும் மகிந்தருக்கு எதிராகவும் அவர் பொலிசாரிடம் முறைப்பாடு செய்துள்ளார். அவுஸ்திரேலிய சமஷ்டிப் பொலிசார் இந்த முறைப்பாட்டை ஏற்றுக்கொண்டுள்ளனர் என்பது இலங்கைக்கு பேரதிர்ச்சியாக உள்ளது. அதுமட்டுமல்லாது அவர் கொடுத்த முறைப்பாட்டை விசாரிக்கவும் அவர்கள் ஒத்துக்கொண்டுள்ளனர். இதனை அடுத்து அவுஸ்திரேலியாவின் தேசிய தொலைக்காட்சி 9 நிமிட நிகழ்ச்சி ஒன்றையும் நடத்தியுள்ளது. அதில் போர் குற்றத்துக்காக இலங்கையின் ஜனாதிபதி மகிந்தரை விசாரிக்கவேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டுள்ளது.
காமன்வெல்த் தலைவர்களின் சந்திப்பில் கலந்து கொள்ள அவுஸ்திரேலிய வரும் ஐனாதிபதி மஹிந்த ராஐபக்ச மீது நடவடிக்கை எடுக்கும் முனைப்பில் இறங்கியுள்ளார் மீனா கிருஷ்னமூர்த்தி.

Geen opmerkingen:
Een reactie posten