சரணடைந்த கோழை கடாபியும் சரணடைதவனை அடித்தே கொன்ற லிபிய பேய்களும் அதனை பாராட்டிய உலக தலைமை அரக்கர்களும்
மனிதாபிமானம் பற்றி வாய் கிழியப்பேசும் ஐரோப்பிய அரசுகள் கடாபி கொல்லப்பட்டதை வரவேற்றதும் அங்குள்ள மனிதாபிமான அமைப்புகள் எனச்சொல்லப்படுபவை மௌனம் சாதிப்பதும் அவர்கள் மனிதர்களே அல்ல என்பதை உலகுக்கு உணர்த்தவே இல்லை.சரணடைந்தவனை அடித்தே கொன்ற அரக்கர்களை பாராட்டி தம்மை வெளிப்படுத்திய இவர்களை யார் தண்டிப்பதோ??
[ வெள்ளிக்கிழமை, 21 ஒக்ரோபர் 2011, 06:55.24 மு.ப GMT ]
கடந்த 69ம் ஆண்டிலிருந்து தொடர்ந்து 42 ஆண்டுகள் வரையில் லிபியாவின் அதிபராக பதவிவகித்த கடாபி நேற்று புரட்சி படையினரால் கொடூரமாக சுட்டுக்கொல்லப்பட்டார்.
பதுங்கு குழியில் பதுங்கி இருந்த அவரை உயிருடன் பிடித்த கிளர்ச்சியாளர்கள் பின்னர் கொடூரமாக கொலை செய்ததாக தெரிகிறது. இதற்கு ஆதாரமாக சில வீடியோ காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளன.
அதிபர் பதவி விலக கோரி கடந்த சில மாதங்களாக பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வந்தன. உள்நாட்டில் புரட்சி படைகள் தவிர நேச நாடுகளும் அதிபர் பதவியை விட்டு கடாபி விலகும் படி கோரிக்கை விடுத்து வந்தன.
கோரிக்கைகளை ஏற்க மறுத்த கடாபி தன்னை எதிர்த்தவர்களை சுட்டுக்கொள்ளும்படி ராணுவத்தினருக்கு உத்தரவிட்டார். இதனையடுத்து ராணுவத்தினருக்கும், புரட்சி படையினருக்கும் இடையே கலவரம் ஏற்பட்டது. புரட்சி படையினருக்கு ஆதரவாக நேசப்படையினரும் போராட்டத்தில் பங்கேற்றனர்.
இதனால் கடாபி ஆதரவு படையினர் தலைநகர் டிரிபோலி உட்பட பல்வேறு முக்கிய நகரங்களை பறிகொடுத்தனர். தொடர்ந்து நடைபெற்று வந்த தாக்குதல்களில் கடாபியின் மகன் மற்றும் கடாபியின் நெருக்கமானவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
கடாபி தன்னுடைய சொந்த ஊரில் தங்கியிருப்பதாக நேசபடைகளுக்கு தகவல்கிடைத்தது. இதனடிப்படையில் சிர்டி நகரில் தாக்குதல் நடத்திய நேசபடையினரின் ஒரு பகுதியினர் கடாபியை தேடும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.
அப்போது நகரின் சாக்கடை குழாய் ஒன்றில் கடாபி பதுங்கியிருப்தை கண்டறிந்தனர். தொடர்ந்து அவர் சாக்கடை குழாயிலிருந்து வெளியே அழைத்து வரப்பட்டார். அப்போது அவர் காக்கி உடை அணிந்திருந்தார்.
புரட்சி படையினர் அவரை சாக்கடை குழாயில் இருந்து வெளியே அழைத்து வந்த போது சரண் அடைந்து விடுவதாகவும் சுட்டுக் கொல்ல வேண்டாம் என கெஞ்சுவதும் வீடியோவில் பதிவானது.
கடாபியின் வேண்டுகோளை ஏற்க மறுத்த புரட்சிக்காரர்கள் அவர் மீது தாக்குதல் நடத்தினர். தாக்குதலில் நிலை குலைந்த அவர் கீழே விழுந்தார். இதில் பலத்த காயம் அடைந்த அவரை ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். ஆனால் வழியிலேயே அவரது உயிர் பிரிந்தது.
கடாபி பிடிபட்டபோது அவருடைய இடது தலைப்புறத்தில் காயம் இருந்ததும் அதிலிருந்து ரத்தம் வழிவதும் அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மூலம் தெளிவாக தெரிகிறது. அவர் நடந்து செல்லும் அளவுக்கு இருந்ததாகவும் வீடியோ காட்சிகள் கூறுகின்றன.
அப்படி இருக்கையில் அவர் எப்படி இறந்தார்? அவர் பிடிபட்டதும் தப்பி ஓட முயன்றாரா? அல்லது கிளர்ச்சியாளர்கள் அவரைச் சுட்டுக் கொன்றனரா? அவருடைய உடலை பிரேத பரிசோதனை செய்த டாக்டர்கள், கடாபியின் தலையில் குண்டு காயம் இருந்ததாக கூறுகின்றனர்.
ஆனால் அந்த காயத்தால் தான் அவர் மரணம் அடைந்தாரா அல்லது அவரை கிளர்ச்சியாளர்கள் கொடூரமாக அடித்துக் கொலை செய்த பிறகு, தலையில் சுடப்பட்டாரா என்பது தெளிவாகவில்லை.
அதிபர் கடாபியை உயிருடன் பிடிபட்ட போது அவருடன் அவருடைய குடும்ப உறுப்பினர்கள் இருந்தனர் என்றும், அதுமட்டுமல்லாமல் அவருக்கு நெருக்கமானவர்களும் உடன் இருந்தனர் என்று பல்வேறு தகவல்கள் வெளியாகி இருப்பதால் அவருடன் இருந்தவர்கள் குறித்து குழப்ப நிலை நீடித்து வருகிறது.
மேலும் கடாபியுடன் அவரது ஆலோசகர் அகமது இப்ராஹிம் உடனிருந்ததாக புரட்சிபடையினர் தெரிவித்துள்ளனர். மேலும் முன்னாள் ராணுவ அமைச்சர் அபு பக்கர் யூனிஸ் கடாபி பதுங்கியிருந்த பகுதியில் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் தெரிவித்தார்.
கடாபி சுட்டுக் கொலை!
[ வெள்ளிக்கிழமை, 21 ஒக்ரோபர் 2011, 03:45.06 மு.ப GMT ]
லிபியாவில் 42 ஆண்டுகள் அதிபராக இருந்த கடாபி ஓர் சர்வாதிகாரி. இவரது முழுப்பெயர் முயாமர் அபு மின்யர் அல் கடாபி.
1942 ஜூன் 7ல் இத்தாலியின் கட்டுப்பாட்டில் லிபியா இருந்த போது பிறந்தார். இவரது பள்ளிப் பருவத்தில் உலகில் இஸ்லாமிய நாடுகளுக்கு எதிராக புரட்சி நடைபெற்று வந்தது.
1952ல் எகிப்து புரட்சியின் போது காமல் அப்துல் நாசர் என்பவர் அதிபர் பதவியை கைப்பற்றினார். இவரது போராட்டத்தால் கடாபி ஈர்க்கப்பட்டார்.
1956ல் இத்தாலிக்கு எதிரான போராட்டத்தில் கடாபி பங்கேற்றார். 1961ல் பெங்காசியில் உள்ள லிபிய ராணுவ அகடமியில் சேர்ந்தார். 1966ல் படிப்பை முடித்தார். மேற்படிப்பை ஐரோப்பியாவில் முடித்தார்.
பின் லிபிய ராணுவத்தில் சேர்ந்தார். 1969 செப்டம்பர் 1ல் இளம் ராணுவ அதிகாரிகள் கொண்ட குழு ஒன்றை தனது தலைமையில் திரட்டினார். அப்போது லிபிய மன்னராக இருந்த இத்ரிஸ் மருத்துவ சிகிச்சைக்காக துருக்கியில் இருந்தார்.
அவருக்கு பதிலாக அவரது மருமகன் பொறுப்பில் இருந்தார். கடாபி தலைமையிலான ராணுவ குழு அவரை வீட்டுக்காவலில் அடைத்து ஆட்சியை பிடித்தது. கடாபி லிபியாவின் முதல் அதிபராக பதவியேற்றார்.
பதவியேற்றவுடன் அமெரிக்கா, பிரிட்டன் ராணுவ வீரர்களுக்கு லிபியாவில் தடை விதித்தார். 1970ல் இத்தாலியில் இருந்து குடியேறியவர்களை கடாபி வெளியேற்றினார்.
1972ல் இஸ்ரேலுக்கு எதிராக போராட்டம் நடத்துவதற்கு பாலஸ்தீனத்துக்கு நிதி மற்றும் ராணுவ உதவி வழங்கினார். 1995ல் இஸ்ரேலிய - பாலஸ்தீன அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டதைத் தொடர்ந்து லிபியாவில் இருந்த 30 ஆயிரம் பாலஸ்தீனியர்களை அவர்கள் நாட்டுக்கே திருப்பினார்.
சீன உதவியுடன் அணு ஆயுதம் மற்றும் ராணுவ ஆயுதங்களை பெருக்க திட்டமிட்டார். 2011 பெப்ரவரியில் 17ல் கடாபியை அதிபர் பதவியில் இருந்து விலக வலியுறுத்தி லட்சக்கணக்கான மக்கள் போராட்டத்தில் இறங்கினர்.
அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படையினரும், லிபிய ராணுவத்துக்கு எதிராக குண்டு மழை பொழிந்தன. இதில் கடாபியின் ஏழாவது மகன் சமீபத்தில் சுட்டுக்கொல்லப்பட்டார்.
ஆறு மாதங்களாக தொடர்ந்த நேட்டோ படை தாக்குதலில் நேற்று கடாபி சுட்டுக்கொல்லப்பட்டார். இவருக்கு இரண்டு மனைவிகள், ஏழு மகன்கள், இரண்டு மகள்கள் உள்ளனர்.
Geen opmerkingen:
Een reactie posten