தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 14 oktober 2011

சுவிசின் முறைகேடான சட்ட செய்யட்ட்ப​டு தமிழர்களுக்​கு அச்சுறுத்த​லாக அமைந்துள்ள​து

  (வீடியோ இணைப்பு) 

சுவிஸ்லாந்து அரசாங்கமானது 2010ஆண்டு இறுதியில் முறைகேடான முறையில் 235க்கும் மேட்பட்ட தமிழர்களின் தொலைபேசி இலக்கங்களை கொழும்புக்கு அனுப்பிவைத்துள்ளதாகவும் அதன் காரணமாக கொழும்பில் பல தமிழர்கள் கைதுசெய்யப்பட்டு, காணமல் போய் அல்லது நீதிக்கு புறம்பான முறையில் கொலை செய்யபட்டும் உள்ளார்கள் என சுவிஸ்லாந்து தேசிய தொலைகாட்சி நிறுவனம் கடந்த செவ்வாய் கிழமை செய்தி வெளியிட்டுள்ளது.இவ்வாறு சுவிஸ் அரசாங்கத்தினால் வழங்கபட்டுள்ள தொலைபேசி எண்கள் யாவும் சுவிஸ்லாந்தில் உள்ள விடுதலை புலிகள் ஆதரவாளர்களினால் இலங்கையிலுள்ள தமது சொந்தங்களுடன் தொடர்பு கொண்ட இலக்கங்கள் ஆகும் என சுவிஸ்லாந்து ஜனநாயக கட்சியின் கென்டன் பாராளுமன்ற உறுப்பினர் லாதன் சுந்தரலிங்கம் தெரிவித்துள்ளார்.
10vor10 vom 11.10.2011
சுவிசிற்கான முன்னாள் இலங்கை துதூவர் Maj.Gen.Jagath Dias வர்களே செய்யட்பாட்டை முன்னின்று செய்துள்ளதாகவும் அவாத் தெரிவித்துள்ளார்.

மேலும் கருத்து வெளியிட்ட சுந்தரலிங்கம் " நாங்கள் இவ்வாறன மனித உரிமை மீறல் தொடர்பாக தொடர்ச்சியாக குரல் எழுப்பினோம் ஆயினும் சுவிஸ் அரசாங்கமானது இந்த கொடூர செயலுக்கு அனுமதி வழங்கி இருந்தது" என அவர் தெரிவிதார்.
Tagesschau vom 12.01.2011
இந்த ஆண்டு பல இலங்கை தமிழர்கள் விடுதலை புலிகளுக்கு நிதி சேகரித்த குற்றச்சாட்டின் பெயரில் சுவிஸ்சில் கைது செய்யப்பட்டு இருந்தனர். இவ்வாறு கைது செய்யப்பட்ட அனைவரினதும் தொலைபேசி அழைப்புக்கள் நீண்ட காலமாக கண்காணிப்பு செய்யப்பட்டபின்னர் அது தொடர்பான தகவல்கள் இலங்கைக்கு வழங்கப்பட்டது.
Tagesschau vom 12.01.2011
இந்த சட்டமுறையானது சுவிஸ் தமிழர்கள் தொடர்புகளை பேனுகின்ற இலங்கையில் உள்ள அவர்களுடைய உறவினர்கள், நண்பர்கள் பாரிய அச்சுறுத்தலை ஏற்ட்படுத்தி உள்ளது இதனால் தற்பொழுது சுவிஸ் அரச வழக்கரினர்கள் பாரிய நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்க வேண்டியும் ஏற்பட்டுள்ளது என தொலைகாட்சி நிறுவனம் சுட்டி காட்டுகின்றது.

சுவிஸ் அரசினால் வழங்கபட்டுள்ள அனைத்து தொலைபேசி எண்களுமே தமிழர்கள் அடிக்கடி தொலைபேசி அழைப்பு மேட்கொள்ளும் கடைகளின் தொலைபேசி எண்களாகும். இதன் காரணமாக பல தமிழர்களின் பெயர்கள் கருப்பு பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளது.

சுவிஸ் அரசினால் கைதுசெய்யப்பட்ட விடுதலை புலி அதரவாளர் ஒருவர் சார்பாக ஆஜராகும் வக்கீழ்Max Birke Mair கருத்து வெளியிடுகையில் இது முற்றிலும் சட்டதிட்கு புறம்பான செயல் என தெரிவித்தார்.

வழக்கறினர் Patrick Camon தான் இலங்கைக்கு தரவுகள் அனுப்புதல் தொடர்பாக அனுமதி வழங்கியவர் ஆவர்.

சுவிஸ்சில் இயங்குகின்ற உயிர் ஆபத்துக்களை எதிர்நோக்குபவர்களின் சங்கமானது அரசாங்க தரப்பு வக்கிலினால் மேட்கொள்ளப்பட இந்த உத்தரவிற்கு கடும் எதிர்ப்பினை வெளியிட்டுள்ளதுடன் இது இலங்கை மீது சுமத்தப்பட்டுள்ள போர் குற்ற விசாரனையினை சுயதினமான முறையில் முன்நெடுத்து செல்ல தடையாக உள்ளது என தெரிவித்தனர்.

Rainer Senweizer சட்ட பேராசிரியரும் இந்த செயன் முறையினை வன்மையாக கண்டித்துள்ளார். மேலும் அவர் இது ஒரு அடிப்படை மனித உரிமை மீறல் செய்யட்பாடு எனவும் தெரிவித்தார்.

சுவிஸ்லாந்து போல் வேறு நாடுகளும் இலங்கைக்கு தொடர்ச்சியாக இவ்வாறன உதவிகளை செய்யுமானால் இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான வன்முறை தொடரும் என்பதில் ஐயமில்லை.

Geen opmerkingen:

Een reactie posten