17 October, 2011
எந்த நாட்களில் இவை எடுக்கப்பட்டது எனத் தெரியாவிட்டாலும் இலங்கையில் இறுதி யுத்தத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் என சந்தேகிக்கப்படும் சில புகைப்படங்களை ஆங்கில ஊடம் ஒன்று வெளியிட்டிருந்தது. அதில் போராளி ஒருவரையும் மற்றும் பொதுமக்கள் 6 பேரை இலங்கை இராணுவம் கொலைசெய்து பின்னர் வெட்டிப் புதைக்க முனையும் காட்சிகள் பதிவாகியுள்ளது. அப் படத்தை உற்று நோக்கும்போது ஒருவரின் வேட்டியை உருவி ஒரு உடலத்தின் காலில் கட்டி உள்ளனர். அதாவது கொலைசெய்யப்பட முன்னர் அவர் கால்கள் கட்டப்பட்டுள்ளது. இதனைவைத்துப் பார்க்கும்போது இவர்கள் யுத்ததில் இறக்கவில்லை என்பது புலனாகிறது. இவர்கள் சரணடைய வந்தவர்களாகவும் இருக்கலாம்.
இலங்கை இராணுவத்தின் கைகளில் உயிருடன் பிடிபட்ட இவர்களை பின்னர் இராணுவத்தினர் கொலைசெய்திருக்கலாம் எனச் சந்தேகம் எழுகிறது. சில உடலங்கள் குழிக்குள் கிடக்கும் நிலையைப் பார்த்தால் அவற்றை வெட்டிப் புதைக்க இராணுவம் காத்து நிற்பது போன்றும் உள்ளது. இப் புகைப்படத்தில் 2 பெண்களின் உடலங்களும் காணப்படுகிறது. மேற்படி உடலங்களை கட்டி இழுத்து இவ்விடத்துக்கு கொண்டுவந்திருப்பதற்கான தடையங்களும் இப் புகைப்படத்தில் இருப்பதாக் பகுப்பாய்வாளர்கள் நம்புகின்றனர்.
இப் புகைப்படமானது முன்னரே வெளியாகியுள்ள போதும் அதன் தெளிவான மற்றும் பெரிய அளவிலான புகைப்படம் தற்போதே அதிர்வு இணையத்துக்கு கிடைக்கப்பெற்றது என்பதனை அறியத்தர விரும்புகிறோம்.
Geen opmerkingen:
Een reactie posten