போலி கடவுச்சீட்டு மூலம் சிங்கப்பூர் ஊடாக இத்தாலி செல்ல முயற்சித்த தாயும் மகளும், சிங்கப்பூரில் இருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம், சாவகச்சேரியை சேர்ந்த 8 வயதான சிறுமி மற்றும் அவரது தாயார் ஆகியோரே நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
குறித்த இருவரும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து குற்ற விசாரணை திணைக்களத்தினால் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிறுமியின் தாயான 37 வயதான பிரதீப் குமாரி டொரின் நேற்றைய தினம் மினுவாங்கொட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.
இதன்போது 10000 ரூபாய் அபராதம் மற்றும் ஒரு லட்சம் ரூபாயிலான சரீர பிணையில் விடுவிக்குமாறு மினுவாங்கொட நீதிமன்ற நீதவான் ஷிலனி சர்த்துந்தி பெரேரா உத்தரவிட்டுள்ளார்.
மீண்டும் ஜுன் மாதம் 12ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என அந்த பெண்ணுக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
குறித்த பெண்ணின் கணவர் பிரான்சில் தொழில் செய்வதாகவும், கணவரினால் அறிமுகப்படுத்தி வைக்கப்பட்ட நபர் ஊடாக போலி கடவுச்சீட்டு தயாரித்ததாகவும், குறித்த பெண் வாக்குமூலம் வழங்கியுள்ளார் என நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/statements/01/172254?ref=ls_d_tamilwin
Geen opmerkingen:
Een reactie posten