சுவிற்சர்லாந்தில் அடைக்கலம் தேடுவோரின் எண்ணிக்கை கடந்த ஆண்டு வெகுவாக குறைந்துள்ளதாக, சுவிஸ் அரச குடிவரவுச் செயலகத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
2017ஆம் ஆண்டு சுவிற்சர்லாந்தில் அடைக்கலம் கோரியவர்களின் எண்ணிக்கை, 33.5 வீதத்தினால் குறைந்திருக்கிறது.
2010ஆம் ஆண்டுக்குப் பின்னர் அடைக்கலம் கோருவோர்களிடம் இருந்து ஆகக் குறைந்த விண்ணப்பங்கள் கடந்த ஆண்டிலேயே கிடைத்துள்ளன.
கடந்தாண்டில் இலங்கையிலிருந்து 840 பேர் சுவிசில் அடைக்கலம் கோரியுள்ளனர். இது 38.8 வீத வீழ்ச்சியாகும் என செயலகம் சுட்டிக்காட்டியுள்ளது.
இதேவேளை கடந்தாண்டில் எரித்ரியாவைச் சேர்ந்தவர்களே அதிகளவில் சுவிசில் அடைக்கலம் கோரியுள்ளனர். எனினும், இது முன்னைய ஆண்டை விட 35 வீதம் குறைவாகும்.
http://www.jvpnews.com/srilanka/04/158738?ref=ls_d_special
Geen opmerkingen:
Een reactie posten