தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 17 januari 2018

30 ஆண்டுகளுக்கு பின்னர் நாடு கடத்தப்பட்ட தந்தை: கண்ணீர் விட்ட மனைவி, குழந்தைகள் !


அமெரிக்காவில் முப்பது ஆண்டுகளாக வசித்து வந்த Jorge Garcia நேற்று முன்தினம் சொந்த நாடான மெக்சிகோவுக்கு திருப்பி அனுப்பப்பட்டார்.
அமெரிக்காவின் Detroit பகுதியில் குடும்பத்துடன் வாழ்ந்து வந்தவர் 39 வயதான Jorge Garcia.
முறையான ஆவணங்களின்றி 10 வயதாக இருக்கும்போது தன் உறவினர்களுடன் அமெரிக்கா வந்த Jorge Garcia, குடியுரிமை பெறுவதற்காக நீண்ட காலம் முயற்சி செய்துவந்தும் அவருக்கு வெற்றி கிட்டவில்லை.
முறையற்ற ஆவணங்கள் இல்லாதவர்களை வெளியேற்றும் டிரம்ப் நிர்வாகத்தின் நடவடிக்கையால் கடந்த நவம்பர் மாதம் நாட்டை விட்டு வெளியேறும்படி அறிவுறுத்தப்பட்ட அவருக்கு குடும்பத்துடன் சிறிது காலம் இருப்பதற்காக நீட்டிப்பு வழங்கப்பட்டது.


என்றாலும் அவர்கள் கிறிஸ்துமஸ் கொண்டாடவில்லை, அவர் வெளியேற்றப்படுவார் என்ற எண்ணம் அவர்களது விடுமுறை நாட்களைக் கூட சோகமாக்கிற்று.
அதுமட்டுமின்றி அவர் இன்னும் 10 ஆண்டுகளுக்கு அமெரிக்காவிற்கு திரும்பி வரவும் அனுமதியில்லை.
திங்களன்று அவரது மனைவியும், பிள்ளைகளும் கண்ணீருடன் அவரை Detroit Metro விமான நிலையத்தில் வழியனுப்பியது காண்போரின் கண்களில் கண்ணீரை வரவழைத்தது.

Jorge Garciaவுக்கு ஆதரவாக பலர் “குடும்பங்களைப் பிரிப்பதை நிறுத்து” என்று எழுதப்பட்ட பதாகைகளுடன் கூடிவந்திருந்தனர்.
இது ஒரு ஆரம்பம்தான், டிரம்பின் நடவடிக்கைகளால் இதேபோல் இன்னும் பல குடும்பங்கள் பிரிவதை நாம் காண நேரிடும் என்று Michigan United அமைப்பில் தன்னார்வலராக உள்ள Raquel Garcia என்பவர் தெரிவித்தார்.

http://news.lankasri.com/usa/03/170012?ref=home-imp-parsely

Geen opmerkingen:

Een reactie posten