தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 25 januari 2018

தாய்நாட்டிற்கு திருப்பி அனுப்ப வேண்டாம்: நாடு கடத்தலை எதிர்த்த 11 வயது அகதி சிறுமி


ஜேர்மனியிலிருந்து ஆப்கான் அகதிகளை நாடு கடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்றுள்ளது.
2016 டிசம்பர் மாதத்திலிருந்து இதுவரை 155 ஆப்கானியர்கள் ஜேர்மனியிலிருந்து சொந்த நாடான ஆப்கானிஸ்தானுக்குத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்கள்.
இம்முறை 19 பேர் ஆப்கானிஸ்தானுக்குத் திருப்பி அனுப்பப்பட்டார்கள். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் Düsseldorf விமான நிலையத்தில் கூடிய "Afghan outcry" என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்தினர்.
சுமார் 300 பேருடன் Hadisaவும் அவளது தாயும்இணைந்து கொண்டனர். ”அங்கே யுத்தமும் வெடிகுண்டுகளும் இருக்கின்றன, பலர் செத்துக் கொண்டிருக்கிறார்கள், நீங்கள் எங்களை அங்கே திருப்பி அனுப்பக்கூடாது” என்று சோகம் ததும்பக் கூறும் 11 வயது Hadisa Bakhshe ஆப்கானிஸ்தானைச் சேர்ந்தவள்.

“ஆப்கானிஸ்தான் பாதுகாப்பான ஒரு நாடல்ல” என்பதை மக்களுக்கு காட்டுவதற்காகவே இந்த எதிர்ப்பாளர்கள் கூட்டத்திற்கு வந்ததாகத் தெரிவிக்கும் அவளது தாயான Maryam, "அப்படிப்பட்ட ஆபத்தான ஒரு நாட்டில் என் பிள்ளைகள் வாழ்வதை நான் விரும்பவில்லை” என்று கூறுகிறார். “நாளை அவர்கள் உயிரோடு இருப்பார்களா அல்லது செத்துப்போவார்களா என்பது கூடத் தெரியாது”.
எதிர்ப்பாளர்களில் அனைவரையும் சட்டெனக் கவரும் இன்னொருவர், சக்கர நாற்காலியில் அமர்ந்திருக்கும் Hasamddin Ansari.
”ஆப்கானியர்கள் தீவிரவாதத்திற்கு இரையாகிக் கொண்டிருக்கிறார்கள், இது மற்றவர்களைவிட எனக்கு நன்றாகத் தெரியும்” என்று கூறும் Ansari, ஆப்கானிஸ்தானில் நிகழ்ந்த குண்டு வெடிப்பொன்றில் தனது இரண்டு கால்களையும் இழந்தவர்.
2016 முதல் யாரை நாட்டை விட்டு அனுப்புவது என்பதில் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் சலுகைகள் வழங்கப்பட்டன.

சுமார் 14000 பேருக்கும் அதிகமான ஆப்கானியர்கள் நாடு திரும்ப சம்மதித்துள்ளதாக ஜேர்மானிய புலம்பெயர்தல் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இவர்களில் 10000 பேர் தற்போதைக்கு அனுப்பப்பட முடியாது என்கிற காரணத்திற்காக ஜேர்மனியில் தற்காலிகமாக தங்க அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

http://news.lankasri.com/germany/03/170606?ref=ls_d_germany

Geen opmerkingen:

Een reactie posten