2017-ல் வரலாறு காணாத வகையில் நிரந்தர புகலிடம் கோரி பிரான்ஸில் விண்ணப்பங்கள் வந்ததாக தெரியவந்துள்ளது.
இதுகுறித்த தகவலை பிரெஞ்சு அகதி பாதுகாப்பு நிறுவனமான Ofpra வெளியிட்டுள்ளது.
அதன்படி கடந்தாண்டு இது 17 சதவீதமாக உயர்ந்துள்ளது, இது 2016-ல் 6.5 சதவீதம் உயர்வாக இருந்தது.
அதாவது 2017-ல் 100,000-க்கும் அதிகமானோர் அதிகளவில் புலம்பெயர விண்ணப்பித்துள்ளனர், நாட்டில் அதிகளவில் மக்கள் குடியேறுவதை தடுப்பேன் என ஜனாதிபதி மேக்ரான் கூறிய நிலையிலும் இப்படி நடந்துள்ளது.
இதுகுறித்து Ofpra-வின் தலைவர் பாஸ்கல் பிரிஸ் கூறுகையில், இந்த எண்ணிக்கையின் மூலம் ஐரோப்பிய நாடுகளில் அதிக மக்கள் குடியேறும் நாடுகளில் ஒன்றாக பிரான்ஸ் இருப்பது தெரிகிறது.
இது சமாளிக்கக்கூடிய அளவிலான எண்ணிக்கை தான், ஆனாலும் ஜேர்மனியின் கடந்தாண்டு எண்ணிக்கையை ஒப்பிட்டால் இதுகுறைவு தான் என கூறியுள்ளார்.
அதேநேரத்தில் புலம்பெயர்வதற்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் சதவீத எண்ணிக்கை 2016-ல் 38 சதவீதமாக இருந்த நிலையில் கடந்தாண்டு 36 சதவீதமாக குறைந்துள்ளது.
இந்த விண்ணப்பங்கள் அல்பேனியா நாட்டிலிருந்து தான் அதிகம் வந்துள்ளது, இந்த பட்டியலில் ஆப்கானிஸ்தான் இரண்டாவது இடத்திலும், ஹைத்தி, சூடான், குயானா ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
இதுகுறித்து பிரான்ஸ் உள்துறை அமைச்சர் ஜிரார்ட் கொலம்ப் கூறுகையில், சட்டவிரோதமான 26000 அகதிகள் கடந்தாண்டு சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்பட்டனர்.
இப்படி வலுக்கட்டாயமாக திருப்பி அனுப்பபடுவோரின் சதவீதம் 14-ஆக உயர்ந்துள்ளது என கூறியுள்ளார்.
http://news.lankasri.com/france/03/169513?ref=ls_d_france
Geen opmerkingen:
Een reactie posten