தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 29 januari 2016

சுவிஸில் முனைப்புப்பெறும் இனவெறிச் சட்ட அமுலாக்கத்திற்கு எதிராக வாக்களிக்க அழைப்பு! (வீடியோ இணைப்பு)

சுவிஸில் முனைப்புப்பெறும் இனவெறிச் சட்ட அமுலாக்கத்திற்கு எதிராக வாக்களிக்க வருமாறு சுவிஸ் ஈழத்தமிழரவை அழைப்பு விடுத்துள்ளது.
எதிர்வரும் 28 ஆம் திகதி பெப்ரவரி மாதம் சுவிஸில் தேசிய கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பொன்று இடம்பெறவுள்ளது.
குற்றமிளைத்த வெளிநாட்டவர்களை நாடு கடத்துவதா? அல்லது இல்லையா? என்பதே இக்கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பின் பிரதான நோக்கம்.
கடந்த 2010 ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்ட பயங்கர குற்றங்களை தடுக்கும் சட்ட அமுலாக்கத்திற்கு அமைவாக பாலியல் பலாத்கார குற்றங்கள், பயங்கரவாத குற்றங்களில் ஈடுபடுவோர்கள் இன்று தண்டிக்கப்படுகிறார்கள்.
அத்துடன் கடும் குற்றங்களில் ஈடுபடுவோர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் தான் என்பதிலும் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.
ஆனால் தண்டனைகள் அனைத்து மனிதர்களுக்கும் சமமாக இருக்க வேண்டும். ஒரே குற்றத்தை புரிந்த இரு நபர்களுக்கு அவர்களின் இன, மொழி, குல, தேச அடையாளங்களை அடிப்படையாக வைத்து தீர்ப்பளிப்பது இனவாத சாக்கடையின் சித்தாந்தம் ஆகும்.
ஏற்கனவே குற்றங்களை தண்டிப்பதற்கு போதிய சட்டங்கள் இருக்கின்ற போதில் வெளிநாட்டவர்களை தண்டிப்பதற்கு புதிய சட்டம் கொண்டுவரப்படவேண்டுமென்றும், காவல் துறை தான் நினைத்ததை செயற்படுத்தலாமென்றும் சுவிஸில் இனத்துவேச மக்கள் கட்சி சட்டமியற்ற எத்தனிப்பதின் சூத்திரம் என்னவென்று நாம் சீர்தூக்கி பார்க்கவேண்டும்.
அந்த நயவஞ்சக நோக்கம் என்னவென்றால் சிறிய சிறிய குற்றங்களையும் அதிபயங்கர குற்றமென்று வகைப்படுத்தி வெளிநாட்டவர்களை நாடு கடத்துவதாகும். அதன் முன்னேற்பாடு தான் காவல் துறைக்கு அதிகாரத்தை கூட்டி நீதித்துறைக்கு வாய்ப்பூட்டு போடும் திட்டமாகும்.
இச்சட்டம் அமுலில் வந்தால் 2 மில்லியன் வெளிநாட்டவர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகி விடும், அதிலும் குறிப்பாக 400 000 ஆயிரம் பேர் இங்கு பிறந்து, இங்கு வளரும் இரண்டாம் தலைமுறையாகும்.
ஒட்டுமொத்த வெளிநாட்டவர்களின் அமைப்புகளும், சுவிஸ் மக்கள் கட்சி தவிர்ந்த ஏனைய கட்சிகளும் எதிர்த்து NO என்று வாக்களிக்கவுள்ள நிலையில் சுவிஸ் வாழ் தமிழீழ மக்களாகிய நாமும் அவர்களுடன் கைகோர்த்து அநீதியை முறியடிக்க வேண்டும்.
உரிமையுடன்
சுவிஸ் ஈழத்தமிழரவை
சுவிட்சர்லாந்தில் குடியேற்ற வாசிகளின் எதிர்காலம் சிக்கலில்?

Geen opmerkingen:

Een reactie posten