தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 23 januari 2016

அகதிகளின் நலனிற்காக புதிய திட்டங்கள்: சுவிஸ் கூட்டத்தில் அமெரிக்க செயலாளர் அறிவிப்பு

சுவிட்சர்லாந்து நாட்டில் நடைபெற்ற உலக பொருளாதார மன்றத்தில் கலந்துக்கொண்ட அமெரிக்க வெளியுறவு செயலாளரான ஜோன் கெர்ரி அகதிகளின் நலனிற்காக புதிய கோரிக்கைகளை அறிவித்துள்ளார்.
சுவிஸின் டாவோஸ் நகரில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் ஜோன் கெர்ரி நேற்று கலந்துக்கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
அப்போது, அகதிகளின் நலத்திட்டப்பணிகளுக்காக ஐ.நா சபை ஆண்டுதோறும் ஒதுக்கும் நிதியை 30 சதவிகிதம் உயர்த்த அமெரிக்கா கோரிக்கை வைத்துள்ளது.
அதாவது, 2015ம் ஆண்டு ஒதுக்கப்பட்ட 10 மில்லியன் டொலர் நிதியை நடப்பாண்டான 2016ல் 13 மில்லியன் டொலராக உயர்த்த அமெரிக்க அரசு வலியுறுத்தியுள்ளது.
மேலும், அகதிகளின் நலன் குறித்து ஆலோசனை நடத்த நியூயோர்க் நகரில் இன்னும் சில மாதங்களில் உச்சி மாநாடு ஒன்று நடைபெற உள்ளது.
இந்த மாநாட்டிற்கு அமெரிக்க ஜனாதிபதியான ஒபாமா தலைமை தாங்க உள்ளார்.
இந்த மாநாட்டில் அகதிகளின் முக்கிய பிரச்சனைகளுக்கான தீர்வுகள் குறித்து விரிவாக விவாதிக்கப்படும்.
இது மட்டுமில்லாமல், அகதிகளுக்கு புகலிடம் உள்ளிட்ட வசதிகளை அளிப்பது தொடர்பாக 10 நாடுகளுடன் பேச்சு வார்த்தை நடந்து வருவதாகவும் ஜோன் கெர்ரி அந்த கூட்டத்தில் அறிவித்துள்ளார்.

http://www.coolswiss.com/view.php?22oOld0bc0a0Qd4e2AMM302cBnB3ddeZBnL202eqAA2e4M0asacb2lOU43

Geen opmerkingen:

Een reactie posten