பிரித்தானியாவில் 13 வயதில் இருந்து வசிக்கும் இலங்கையர் ஒருவர் நாடு கடத்தப்படும் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளதாக அந்நாட்டு ஊடகமான டெய்லி போஸ்ட் தகவல் வெளியிட்டுள்ளது.
ரகுவரன் பரமேஸ்வரன் என்ற இலங்கையர், தமது பெற்றோர் போரில் இறந்து விட்டார்கள் என்பதற்கான ஆதாரத்தை காண்பிக்க தவறியமையை அடுத்து, நாடு கடத்தப்படும் ஆபத்தை எதிர்கொண்டுள்ளார்.
ரகுவரன் 2005ம் ஆண்டு பிரித்தானியாவுக்குள் அடைக்கலம் பெற்றார். தற்போது 25 வயதாகும் ரகுவரன், நோத்ஒப்பில் வசித்து வருகிறார்.
அவரின் சட்டத்தரணி, வீசாவை புதுப்பிப்பது தொடர்பில் உரிய அறிவுரைகளை கூறியிருக்கவில்லை. இதனையடுத்தே தற்காலிக அனுமதியை கொண்டிருக்கும் ரகுவரனை நாடு கடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
புதுக்குடியிருப்பில் இருந்து போரின் காரணமாக தமது பெற்றோர் தம்மை பாதுகாப்பு கருதி பிரித்தானியாவுக்கு அனுப்பி வைத்ததாக குரு என்று அழைக்கப்படும் ரகுவரன் தெரிவித்துள்ளார்.
எனினும் தமது மாமா நாட்டுக்கு திரும்பி தமது பெற்றோர் தொடர்பில் தேடிப் பார்த்த போதும் அவர்கள் பற்றிய தகவல் எதுவும் கிடைக்கவில்லை என்று குரு குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில் பிரித்தானியாவுக்கு வந்தபோது தமக்கு தற்காலிக வீசா வழங்கப்பட்ட போதும் நிரந்தர வீசாவுக்கான நடைமுறைகள் தொடர்பில் தமது சட்டத்தரணி தமக்கு உரிய தகவல்களை வழங்கவில்லை என்றும் குரு தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து நோத்ஒப் பகுதியில் உள்ள மக்கள் குருவை நாடு கடத்தக்கூடாது என்று கூறி கையொப்பம் திரட்டல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmuyBRVSWiwzA.html
Geen opmerkingen:
Een reactie posten