இரண்டு மில்லியன் மனிதர்களின் வதிவிட உரிமை மீதான ஆபத்து இந் நாட்டு கடவுச் சீட்டின்றி சுவிற்சர்லாந்தில் நீண்டகாலமாகத் தொழில் புரியும் இரண்டு மில்லியன் மக்களிற்கு நாடு கடத்தல் சட்ட அமுலாக்கம் ஆபத்தானது.
சிறிய குற்றச் செயல்கள் புரிபவரை எவ்வித விசாரணையுமின்றி பலவந்தமாக திருப்பி அனுப்ப இது வழி செய்கிறது.
இச் சட்ட மூலமானது இந் நாட்டில் நீண்ட காலமாக வாழும் மக்களின் இரண்டாம் தலைமுறையினருக்கும் உரித்தானதாகும். சுவிற்சர்லாந்து பாராளுமன்றத்தில் ஏற்கனவே கொண்டுவரப்பட்ட நாடு கடத்தல் சட்டமானது நீண்ட காலம் இந்த நாடுகளில் வசிப்பவர்களிற்கு ஒரு கடினப் போக்குடைய சட்டமாகும் என லங்காசிறி வானொலியின் அரசியற்களம் வட்ட மேசை நிகழ்ச்சியில் சோசலிசக் கட்சியின் செயற்பாட்டாளர்களான சிறீ மற்றும் தர்சிக்கா விபரிக்கின்றனர்.
http://www.tamilwin.com/show-RUmuyBScSWit1J.html
Geen opmerkingen:
Een reactie posten