தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 25 januari 2016

அகதிகளின் பிரச்சனைகளுக்கு தீர்வு காணாதது ஏன்?: சுவிஸ் அரசுக்கு சர்வதேச செஞ்சிலுவை சங்கம் கண்டனம்!

சுவிட்சர்லாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் அகதிகளின் பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு காணாதது ஏன் என சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் தலைவர் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளார்.
சுவிஸின் டாவோஸ் நகரில் நடைபெற்று வரும் உலக பொருளாதார மன்றத்தில் பங்கேற்ற சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் தலைவரான Peter Maurer இவ்வாறு கண்டனம் தெரிவித்துள்ளார்.
பொருளாதார மன்றத்தில் பேசிய அவர், ‘அகதிகளின் பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு காண ஐரோப்பிய நாடுகளிடம் திறமையும் வலுவான பொருளாதாரமும் இருக்கிறது.
ஆனால், ஐரோப்பிய நாடுகளின் வரலாற்றில் லட்சக்கணக்கணக்கான அகதிகளுக்கு புகலிடம் அளிக்க அந்த காலக்கட்டத்தில் சாத்தியம் ஆயிற்று. ஆனால், இப்போது, அந்த எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருகிறது.
யுத்தங்களால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு அருகில் உள்ள சில நாடுகள் ஆயிரக்கணக்கான அகதிகளுக்கு புகலிடம் அளிக்கிறது. ஆனால், இந்த எண்ணிக்கையை கூட ஐரோப்பிய நாடுகள் எட்டவில்லை என்பது வேதனைக்குரியது.
சுவிட்சர்லாந்து, ஐரோப்பிய நாடுகள் மற்றும் ஏனைய மற்ற நாடுகளும் அகதிகளின் பிரச்சனைகளை சட்டரீதியாக எதிர்க்கொள்ள நிரந்திர தீர்வுகளை ஏற்படுத்த முன்வர வேண்டும்.
இதற்கு அகதிகளுக்காக சேவை செய்துவரும் செஞ்சிலுவை சங்கத்திற்கு அனைத்து நாடுகளும் நிதியுதவி செய்ய வேண்டும்.
அகதிகளின் பிரச்சனைகளை இந்த நேரத்தில் தீர்க்காவிட்டால், எதிர் காலத்தில் இந்த தவறுக்கு மிக மோசமான விலையை கொடுக்க நேரிடும் என Peter Maurer எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten