தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 2 februari 2016

ஓடும் ரயிலில் முதியவர்களை கடுமையாக தாக்கிய அகதிகள்: ஜேர்மனியில் தொடரும் அவலம் (வீடியோ இணைப்பு)

ஜேர்மனி நாட்டில் ஓடும் ரயிலில் பெண்ணிடம் அத்துமீறி செயல்பட்ட அகதிகளை தடுக்க வந்த இரண்டு முதியவர்கள் கடுமையாக தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜேர்மனியின் Sendlinger Tor என்ற நகரிலிருந்து Munich நகருக்கு பயணிகள் ரயில் ஒன்று கடந்த ஞாயிற்றுகிழமை அன்று புறப்பட்டுள்ளது.
ரயிலில் அரபு நாடுகளை சேர்ந்த சில அகதிகளும் பயணம் செய்துள்ளனர். அப்போது, அவர்களுக்கு அருகில் ஒரு இளம்பெண் அமர்ந்து பயணம் செய்துள்ளார்.
இதனை பார்த்த அகதிகள் அந்த பெண்ணிடம் தகாத முறையில் நடந்துள்ளனர். இந்த செயலை தடுக்க முடியாத அந்த பெண் உதவிக்கு அலறியுள்ளார்.
அப்போது, அதே பெட்டியில் பயணித்த ஜேர்மனி குடிமக்களான இரண்டு முதியவர்கள் விரைந்து சென்ற பெண்ணை காப்பாற்ற முயற்சித்துள்ளனர்.
ஆனால், முதியவர்களின் செயலால் ஆத்திரம் அடைந்த அகதிகளில் ஒருவன், ஒரு முதியவரை உதைத்து கீழே தள்ளியுள்ளான்.
மற்றொரு அகதி அவரது நண்பரை பாதுகாக்க மற்றவர்களை தடுத்து நிறுத்தியுள்ளான்.
ஓடும் ரயிலில் நடந்த இந்த காட்சியை ஜேர்மனியை சேர்ந்த Tom Roth என்ற வாலிபர் தனது கைப்பேசியில் படம் பிடித்துள்ளார்.
இது குறித்து அவர் பேசியபோது, ‘இளம்பெண் தனியாக அமர்ந்திருந்தபோது அகதிகளில் ஒருவன் அந்த பெண்ணின் பின்புறத்தில் கை வைத்துள்ளான். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பெண் அவனது கையை உதறிவிட்டு தப்பிக்க முயன்றபோது இந்த தகராறு ஏற்பட்டுள்ளது’ என கூறியுள்ளார்.
ரயில் நிலையத்தை அடைந்தவுடன் அகதிகள் குறித்து அங்குள்ள பொலிசாரிடம் புகார் அளிக்கப்பட்டது. ஆனால், இந்த விவகாரத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்க இயலாது என பொலிசார் மறுத்துள்ளனர்.
புத்தாண்டு தொடங்கி ஜேர்மனியில் புலம்பெர்ந்தவர்கள் மற்றும் அகதிகள் அந்நாட்டு பெண்களிடம் தகாது முறையில் நடந்துக்கொள்ளும் சம்பவம் அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
http://world.lankasri.com/view.php?20yOlTdbcs80624e2KMQ3022ZnB3ddcdBnB20eMqAAae4M08E4cb2lOm23

Geen opmerkingen:

Een reactie posten