தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 26 januari 2016

அகதிகளுக்கு அடைக்கலம் அளிக்கவில்லை என்றால் அபராதம்: லூசேன் அரசாங்கம் உத்தரவு

10 வாரங்களுக்குள் அகதிகளுக்கு அடைக்கலம் வழங்கவில்லை என்றால் அபராதம் கட்ட வேண்டும் என்றும்லூசேன் மாநிலம் உத்தரவிட்டுள்ளது.
சுவிட்சர்லாந்துக்கு அடைக்கலம் தேடி வரும் அகதிகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது.
எனினும் அகதிகளுக்கு அடைக்கலம் அளிக்க பலரும் மறுத்துவருகின்றனர்.
இந்நிலையில் பத்து வாரங்களுக்குள் 500 அகதிகளுக்கு அடைக்கலம் வழங்கவேண்டும் என்று தன் கட்டுப்பாட்டில் உள்ள நகராட்சிகளுக்கு லூசேன்மாநிலம் அரசு உத்தரவிட்டுள்ளது.
 இதுதொடர்பாக லூசேன் மாநில சான்செலர் கூறுகையில், சமூக உதவி சட்டம் மற்றும் கேண்டானலுக்கான புதிய அகதிகள் திட்டம் 2016 ஆகியவைகளின்படி அகதிகளுக்கு அடைக்கலம் வழங்குவோர் தொடர்பான திட்டத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
அதன்படி லூசெர்ன் மாநிலத்தில் மொத்தமுள்ள 83 நகராட்சிகளில் 49 நகராட்சிகள் இன்னும் பத்து வாரங்களில் 500 அகதிகளுக்கு அடைக்கலம் வழங்கவேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
அவ்வாறு பத்து வாரங்களுக்குள் அகதிகளுக்கு அடைக்கலம் அளிக்காத நகராட்சிகள் அபராதம் அளிக்கவேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

http://www.coolswiss.com/view.php?22cQ0aUc203LnBZb4e2coOl7acb2eqAA0dde4AMMC0bcedlOo2e4dnBnB4302dsa0W43

Geen opmerkingen:

Een reactie posten