தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 12 oktober 2013

MV Sun Sea கப்பல் மூலமாக கனடாவில் தஞ்சமடைந்தவர்களுக்கு அகதி அந்தஸ்த்துக் கிடைக்குமா?

MV Sun Sea கப்பல் மூலமாக கிட்டத்தட்ட 500 தமிழர்கள் பிரிட்டிஸ் கொலம்பியா மாகாணக்கரையை 2010ல் வந்தடைந்தனர். குடி வரவு வளக்கறிஞர்களின் கருத்துப்படி இவர்களின் வளக்குகளைத் திரும்பத் தொடங்கவேண்டும் எனக் கேட்டுள்ளனர் எனத் தெரிகிறது.

அதே நேரம் அரசாங்கப் பிரதிநிதிகள் இவர்களில் சிலரது விசாரணை ஆதாரங்களை குறிப்பாக இந்தக் கப்பல் மூலமாக வந்தடைந்த தமிழர்கள் தமது சொந்த நாடான சிறிலங்காவிற்குச் சென்றால் அவர்கள் சித்திரவதையை எதிர்நோக்க வேண்டிய நிலை ஏற்படும் என்பதை வெளிப்படுத்தவில்லை எனவும் கூறப்படுகின்றது.

இந்தத் தமிழர்கள் நியாயமான முறையில் அகதி அந்தஸ்து வழங்கப்படுவதற்கு ஏற்றவர்கள் எனவும் இவர்கள் பல காலமாக உள்நாட்டுப் போரினால் சீரழிந்திருக்கும் ஒரு நாட்டில் இருந்து வந்தவர்கள் எனவும் இவர்கள் திருப்பி அனுப்பப்பட்டால் துஸ்பிரயோகத்திற்கும், சித்திரவகைக்கும் ஆழாகவேண்டிய நிலையில் இருக்கின்றார்கள் என அகதிகளுக்கான வழக்கறிஞர்கள் வாதாடியிருக்கிறார்கள்.
இத்தகைய நிலையிலும் அரசாங்கம் ஒரு கடுமையான நிலைப்பாட்டை எடுத்திருக்கின்றது. இவர்களை அனுமதிக்க முடியாதுள்ளது எனவும், இவர்கள் உண்மையான அகதிகள் இல்லையெனவும், இவர்கள் வந்தமை பரந்த அளவிலான ஒரு கடத்தல் செயலின் ஒரு முயற்சி எனக் குறிப்பிடுகின்றது.
இவ்வாறு இவர்களது நிலை முடிவிற்கு வராத நிலையில் இருக்கின்றது.
கப்பல் மூலமாக மொத்தமாக 492 பேர் வந்திருக்கின்றார்கள் என உத்தியோகப+ர்வ அறிக்கை வெளியிட்டுள்ளது.
117 அகதி அந்தஸ்து விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கின்றன.
117 அகதி அந்தஸ்து விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
29 விண்ணப்பதாரிகளுக்கு நாட்டைவிட்டுச் செல்லும்படி ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இருவர் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள்.
இத்தகைய விபரத்தை குடிவரவு, அகதிகள் சபை வெளியிட்டிருக்கிறது எனத் தெரிகிறது.

Geen opmerkingen:

Een reactie posten