தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 21 oktober 2013

பிரபாகரனை கோடாரியால் வெட்டிகொன்றோம்; மேலும் ஒரு பரபரப்பு தகவல்!

இறுதி கட்ட ஈழப் போரின் மர்மங்களை நான்கு ஆண்டுகள் ஆகியும் அறிய முடியாதவண்ணம் தலைவர் பிரபாகரன் விட்டு சென்றுள்ளார். அவர் இறந்து விட்டார் என சொல்லும் இலங்கை அரசு அதற்கான சரியான ஆதாரத்தை இதுவரை வெளியடப்படவில்லை. தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் திரு.வே.பிரபாகரன் எங்கே போனார்? அவர் மனைவி மற்றும் மகள் எங்கே போனார்கள்? புலனாய்வுத் துறைப் பொறுப்பாளர் ச.பொட்டம்மான் அவர்கள் எங்கே உள்ளார் என விடை காண முடியாத வினாக்களை மட்டுமன்றி தமிழினத்தின் எதிர்காலத் திட்டங்களை முன்னெடுப்பதற்கான தக்கதொரு தலமை இல்லை எனும் நிலைப்பாட்டினையும் தந்து விட்டுச் சென்றிருக்கின்றது.

இலங்கையின் அரச படைகளால் இற்றை வரை பொட்டம்மான் பற்றிச் சொல்லப்படுகின்ற ஒரே பதில், அவர் எங்காவது தப்பிச் சென்றிருக்கலாம். அல்லது உடல் உறுப்புகளைக்கூட எடுக்க முடியாத வண்ணம் தன்னைத் தானே மாய்த்துக் கொண்டிருக்கலாம்.
இறுதிப் போர்க் காலத்தின் கடைசி நாட்களில் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு தற்போது விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போராளிகள் மூலம் மெது மெதுவாக சில செய்திகள் கசிந்து கொண்டு தான் இருக்கின்றன. தவிர அரச படைகளில் சிலரும் அவ்வப்போது தாமும் தம் பக்கத் தரப்பினரும் என்னவெல்லாம் செய்தார்கள் என்பதை ஒப்புவித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்.
kodaliஇவ் வரிசையில் வன்னியில் மே மாதம் 17ம் தேதி வரை கள முனையில் நின்ற ஓர் போராளியின் கூற்றுப் படி, ”இறுதி நேரத்தில் திருப்பி அடிக்க முடியா விட்டால் கடல் ஊடாகத் தப்பிச் சென்று கிழக்கு மாகாணத்தில் உள்ள காட்டுப் பகுதியில் எங்காவது மறைந்திருப்பது எனத் தலமைப் பீடத்தால் திட்டம் தீட்டப்பட்டதாகவும், தப்பிச் செல்வதற்கான ஏற்பாடுகள் யாவும் விளக்கமாகக் கூறப்பட்டதாகவும் அறிய முடிந்தது. தவிர தப்பிச் செல்லும் நோக்கில் புறப்பட்ட முதலாவது படகு நந்திக் கடலில் வைத்து கடற் படையினரால் துவம்சம் செய்யப்பட்டது. இதன் பின்னர் அந்த முயற்சி கைவிடப்பட்டதோடு, சரணடையலாம் எனும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதே போன்று இறுதிப் போர்க் காலத்தில் கள முனையில் நின்ற அரச படை அதிகாரி ஒருவர் அண்மையில் உலக வாழ் தமிழர் அமைப்பு ஒன்றிற்கு அழைப்பினை ஏற்படுத்தி அழையா விருந்தாளியாக புதிய தகவல் ஒன்றினையும் முன் வைத்துள்ளார்.  அது தான் “அம்புலன்ஸ் வண்டி ஒன்றில் பிரபாகரனும், முக்கிய தளபதிகளும் தப்பிச் செல்ல முனைந்ததாகவும் அவ்வேளையில் நச்சு வாயுத் தாக்குதல் மூலம் அவர்களின் நடவடிக்கையைத் தடுத்த அரச படையினர் அவர்களைக் கைது செய்து அவர்கள் சரணடைவதை ஏற்பது போல கபட நாடகம் ஆடி, பிரபாகரன் உள்ளிட்டோரை கொழும்பிற்கு அழைத்துச் சென்றதாக கூறப்படுகின்றது.

இவர்களைப் பார்க்க வந்த “படைத்துறை அமைச்சர் திரு. கோத்தபாய ராஜபக்ச அவர்கள் ஆவேசத்துடன் பிரபாகரனுக்கு கன்னத்தில் அறைந்ததாகவும் பின்னர் அவரைப் போட்டுத் தள்ளுமாறு உத்தரவிட்டதாகவும் கூறப்படுகின்றது. இதனையடுத்து கொலை வெறியோடு வன்மம் தீர்க்கும் வண்ணம் பிரபாகரனினைக் கோடாரியால் தலையில் வெட்டிக் கொலை செய்திருப்பதாக கூறுகிறது அந்த இராணுவ அதிகாரியின் வாக்கு மூலம்.
இவர் கூறும் நாள் பிரபாகரனை தலையை ஆட்டியது போன்று வீடியோவை வெளியிட்ட முந்தைய தினம். அப்படியானால் அடுத்தநாள் தலையில் எவ்வித காயமும் அந்த உடலில் காணப்படவில்லை.
இவர் கூறுவது உண்மை என்றால் தண்ணீரில் கண்டெடுத்து தலையை அசைத்து அசைத்து காட்டியது யாருடைய உடல், கோடரியால் வெட்டிக்கொன்றால் இன்னம் ஏன் இலங்கை அரசு அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை.
இன்னமும் விடை காண முடியதாக பல வினாக்களை ஈழப் போர் தந்து விட்டுச் சென்றிருக்கிறது. விடை கிடைக்கும் வரை பொறுமையாக காத்திருப்போம்

Geen opmerkingen:

Een reactie posten