இலங்கையில் இருந்து பல ஆயிரம் மைல்கள் தொலைவில் உள்ள கனடா நாட்டு பிரதமருக்கு இலங்கையில் நடந்த இனப்படுகொலை மற்றும் போர்குற்றம் பற்றி தெரிகிறது. அதனால் இலங்கையில் நடக்கும் காமன் வெல்த் மாநாட்டை புறக்கணிப்பதாக அறிவித்து விட்டார்.
ஆனால் இலங்கை நாட்டின் அருகாமையில் உள்ள இந்தியாவின் பிரதமருக்கு இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல் , இனப்படுகொலை பற்றி எதுவுமே தெரியவில்லையாம். இந்தியாவின் பிரதமருக்கும் , இந்திய அரசுக்கும் ஒரு சிறிதும் மானம் , வெட்கம் இல்லை என்பது மட்டும் தெளிவாகத் தெரிகிறது.
இலங்கையோடு கூட்டு சேர்ந்து தமிழர்களை படுகொலை செய்துவிட்டு , இப்போது இலங்கைக்கு நற்சான்றிதழ் வழங்க இந்திய பிரதமர் , மற்றும் அமைச்சர்களும் இலங்கையில் நடக்கும் காமன் வெல்த் மாநாட்டிற்கு செல்கிறார்கள். நியாயமாக இந்தியா இம்மாநாட்டை புறக்கணித்திருக்க வேண்டும் அல்லவா?
ஆனால் கனடா நாட்டு பிரதமருக்கு நெஞ்சில் ஈரமும் மனிதத் தன்மையும் உள்ளது . அதனால் தான் அவர் இந்த இரத்தம் தோய்ந்த இலங்கையில் நடக்கும் மாநாட்டை புறக்கணிக்க சம்மதித்தார். அவருக்கு தமிழர்களின் சார்பில் நம் நெஞ்சார்ந்த நன்றிகள். இந்திய பிரதமருக்கு நம் வன்மையான கண்டனங்கள் .
The Prime Minister, Stephen Harper, says he will boycott next month’s Commonwealth summit in Sri Lanka because of human rights concerns. He is also threatening to cut off funding to the organisation over the decision to host the meeting there.
Mr Harper said on Monday that the Sri Lankan government has failed to uphold the Commonwealth’s core values. He says Canada remains disturbed by ongoing reports of intimidation and incarceration of political leaders and journalists, harassment of minorities, reported disappearances and allegations of extra-judicial killings.
But Indian Prime Minister stands as mute spectator even as Sri Lanka committed genocide on Tamils. Still he wants to participate in the Commonwealth Summit. Does he have any shame or morality?
We Tamils all over the world wholeheartedly thank Stephen Harper for upholding humanity. At the same time we condemn Indian Prime Minister for his inhumane and insensible behaviour.
நான் நினைக்கிறேன் ஆங்கிலயரால் ஆளப்பட்ட்ட நாடுகள் மனித உரிமைக்கு எதிரானவர்கள் என்று
!கனடா ஆங்கிலேயரைக்கொண்டதுதான்!ஆனால் பிரான்ஸினரும் அதிகளவு உள்ளதால் கருணை அங்கு உள்ளது போலும்!
இந்தியா மட்டுமா அகதிகளை சாகடிக்கும்?! அவுஸ்திரேலியா கூட மனிதாபிமானமற்ற நாடே!!சுவிஸ் கூட புலிகளுக்கு இலங்கை ஆபத்தான நாடு என்றறிந்தும் நாடுகடத்தவில்லையா??எல்லாமே சுயலாபமே அன்றி மனிதம் எங்கும் இல்லை!!...
Geen opmerkingen:
Een reactie posten