[ வெள்ளிக்கிழமை, 04 ஒக்ரோபர் 2013, 03:34.58 பி.ப GMT ] |
சுவிட்சர்லாந்தில் விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் என்று குற்றம்சாட்டப்பட்ட இரண்டு இலங்கை தமிழர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
சுவிட்சர்லாந்தில் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் இரண்டு இலங்கை தமிழர்கள் கைது செய்யப்பட்டனர்.
இவர்களிடம் விசாரணை நடத்தி இவர்களின் புகலிடக் கோரிக்கையானது 2011ம் ஆண்டு ரத்துசெய்யப்பட்டது.
மேலும் இவர்கள் தங்களது சொந்த நாட்டுக்கு செல்லுமாறு சுவிஸ் அரசாங்கம் உத்தரவிட்டது.
இந்நிலையில் இவர்களில் ஒருவர், நாங்கள் எங்கள் நாட்டிற்கு சென்றால் எங்கள் உயிருக்கு ஆபத்து என்றும் எனவே எங்களை திருப்பி அனுப்ப வேண்டாம் எனவும் சுவிஸ் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து இந்த கோரிக்கையானது அகதிகள் ஜக்கிய நாடுகள் சபையின் உயர் ஆணையருக்கு எடுத்து செல்லப்பட்டது. சுவிட்சர்லாந்தில் இலங்கை தமிழர்கள் ஏராளமாக வசிக்கின்றனர்.
மேலும் இலங்கையில் 1972 மற்றும் 2009ம் ஆண்டுகளில் நடைபெற்ற போரில் 100,000 மக்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் மனித உரிமை தலைவர் நவநீதம் பிள்ளை இலங்கைக்கு பயணம் மேற்கொண்டு 40,000 மக்கள் கொல்லப்பட்டுள்ளதாக இலங்கை அரசிடம் தெரிவித்துள்ளார்.
ஆனால் இலங்கை அரசோ இதனை மறுத்துவிட்டு சமரச செயல்களில் இறங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
|
|
http://swiss.lankasri.com/view.php?203604G222eZPBd3ceaSmOJd4cedQWAAcbdc4cMQKdbd4dlAma043d5nZ3e043Gao602
நாடுகடத்தப்பட்டு கைதான இரு இலங்கையரை பார்வையிட சுவிஸ் அதிகாரிகளுக்கு அனுமதி
[ வெள்ளிக்கிழமை, 04 ஒக்ரோபர் 2013, 02:56.14 AM GMT ]
தஞ்சக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு, சுவிஸிலிருந்து நாடுகடத்தப்பட்ட இரு இலங்கையரை சுவிஸ் அதிகாரிகள் சந்திக்க இலங்கை அதிகாரிகள் அனுமதி வழங்கியுள்ளனர்.
சுவிஸிலிருந்து நாடுகடத்தப்பட்ட இரண்டு இலங்கையர்களும், இலங்கை வந்தடைந்ததும் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டனர். குறித்த இருவரும் விடுதலைப் புலிகள் தொடர்பான செயற்பாடுகளில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
கடந்த 2011 ம் ஆண்டு குறித்த இரு இலங்கையர்களின் தஞ்சக் கோரிக்கையினையும் சுவிஸ் குடிவரவு அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.
இந்நிலையில், நாடுகடத்தப்பட்ட இவர்கள், உடனடியாக கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
தொடர்ந்தும் காவலில் வைக்கப்பட்டிருக்கும் இருவரையும் அவர்களது குடும்ப உறவினர்களும் சுவிஸ் அதிகாரிகளும் தொடர்புகளை ஏற்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், 1994ம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட உடன்படிக்கைக்கு அமைவாக, கைது செய்யப்பட்டுள்ள இருவரின் உடல்நலை குறித்து மதிப்பிட சுவிஸ் அதிகாரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
Geen opmerkingen:
Een reactie posten