தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 27 oktober 2013

சிறிலங்காவில் பாடசாலை மாணவிகளை மேலாடையின்றி ...


சிறிலங்காவில் நடைபெறவுள்ள பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொள்ள நாட்டுத் தலைவர்கள் அங்கு விஜயம் செய்யவுள்ளனர். இதன்படி சுவாசிலாந்து அரச குழுவினரும் சிறிலங்கா செல்லவுள்ளனர். இந்த குழுவினரை வரவேற்க அந்த நாட்டு வழக்கப்படி, பாடசாலை மாணவிகளை மேலாடையின்றி ...


அரைநிர்வாணமாக நடனமாடுவதற்கு சிறிலங்கா அரசாங்கம் தயார்படுத்தி வருவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்நிலையனாது பெற்றோர்களிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. சிறிலங்கா கல்வி அமைச்சு குளியாப்பிட்டியில் உள்ள முன்னணிப் பாடசாலை ஒன்றுக்கே, இந்த நடனத்துக்கான பொறுப்பை ஒப்படைத்துள்ளது.

இதில் பல நடனங்கள், சுவாசிலாந்து கலாசாரப்படி – அரைநிர்வாணமாக ஆடும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதாக பெற்றோர் தெரிவித்துள்ளனர். இதுபோன்ற நடனங்களுக்கு பாடசாலை மாணவர்களைப் பயன்படுத்திக் கொள்ள கல்வி அமைச்சுக்கு உரிமையில்லை என்று இலங்கை ஆசிரியர் சங்க பொதுச்செயலர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா போன்ற நாடுகளில் இது ஏற்றுக்கொள்ளக் கூடியதா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இதனிடையே, பொதுநலவாய மாநாட்டுக்கு வரும் 54 நாடுகளையும் அந்தந்த நாட்டு கலாசார வழக்கப்படி வரவேற்பதற்கு, 54 பாடசாலை மாணவர்களுக்கு பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது. மன்னராட்சி நடைபெறும் சுவாசிலாந்தில் மன்னர் முன்பாக இளம்பெண்கள் மேலாடையின்றி, நடனமாடுவது வழக்கமாகும்.

Geen opmerkingen:

Een reactie posten