கனடாவில் பிறந்து வளர்ந்த ஒருவர் பல வருடங்களாக கனடிய குடியுரிமை பெற போராடி வரும் நிலையில், அவரின் பிரச்சனைக்கு தற்காலிக தீர்வு கிடைத்துள்ளது.
Jonathan Yoani Kuiper என்ற இளைஞரின் குடும்பம் கடந்த 30 வருடங்களுக்கு முன்னர் நெதர்லாந்திலிருந்து கனடாவுக்கு புலம்பெயர்ந்தது.
புலம்பெயர்ந்த சமயத்தில் Kuiper, 14 மாத குழந்தையாக இருந்தார். கனடாவின் Aylmer நகரில் வளர்ந்த Kuiper, பள்ளிப்படிப்பு, இளநிலை பட்டப்படிப்பு, வேலை என 27 வருடங்கள் கனடாவில் தான் அனைத்தையும் மேற்கொண்டார்.
பின்னர், முதுகலை பட்டப்படிப்பு படிக்க மற்றும் அதற்கு தகுதியான வேலையில் சேர ஐரோப்பாவுக்கு Kuiper சென்றுவிட்டார்.
இந்நிலையில், கனடிய குடியுரிமை பெறுவதற்காக கடந்த 2013-ல் Kuiper விண்ணப்பித்திருந்தார்.
செயல்முறையில் இருந்த விண்ணப்பம் அடுத்த இரண்டாண்டுகளில் கனடா அரசால் நிராகரிக்கப்பட்டது.
Kuiper விண்ணப்பித்த ஆண்டிலிருந்து கடைசி நான்கு ஆண்டுகள் கனடாவில் வாழவில்லை என்பதால் நிராகரிக்கப்பட்டது.
இதுவரை வாழ்ந்த தனது முக்கால்வாசி வாழ்க்கையை கனடாவில் Kuiper கழித்திருந்தாலும் அதை அரசு பரீசீலிக்கவில்லை.
இதுகுறித்து கனடாவின் அகதிகள் மற்றும் குடிவரவு வாரியத்தில் Kuiper மேல்முறையீடு செய்த நிலையில், மிகுந்த போராட்டத்துக்கு பின்னர் தற்போது Kuiper-ன் நிரந்தர வசிப்பிட தகுதிக்கு ஐந்து வருட நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் Kuiper அடுத்த மூன்று வருடங்கள் கனடாவில் வாழ்ந்தால் அந்நாட்டின் குடியுரிமை கிடைக்கும்.
இதுகுறித்து நெதர்லாந்தில் தற்போது வசித்து வரும் Kuiper கூறுகையில், குடியேற்ற செயல்முறை என்பது பணம் மற்றும் வாக்குகள் அடிப்படையில் தான் செயல்படுத்தப்படுகிறது.
அரசு எனக்கு தற்போது அளித்துள்ள சலுகை திருப்தி அளிக்கவில்லையென்றாலும் சற்று ஆறுதலாகவே உள்ளது.
இவ்வளவு போராட்டத்துக்கு பின்னரும் கனடிய குடியுரிமை வாங்கவேண்டுமா என யோசிக்கிறேன். இதுகுறித்து என் மனைவியிடம் ஆலோசிக்கவுள்ளேன்.
நான் என் வேலையை விட்டு கனடாவுக்கு வந்து இனி வாழ்ந்தால் குடியுரிமை சில வருடங்களில் கிடைக்கலாம்.
கிடைத்த பின்னர் குடியுரிமை விழாவுக்கு என்னை அழைக்க இன்னும் இரண்டு வருடங்கள் ஆகும்.
அதன்பின்னர் தான் கனேடிய பார்ஸ்போர்ட் கிடைக்கும், இது என் நேரத்தை தான் மேலும் வீணாக்கும்.
இந்த விடயத்தில் கனடிய குடியேற்ற அமைச்சர் எனக்கு உதவினால் உடனடியாக என் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கலாம்.
மொத்தத்தில் நான் இந்த விடயத்தால் அதிகம் சோர்ந்து விட்டேன், என்னை எல்லோரும் கனடியனாக அங்கீகரிக்கிறார்கள்.
ஆனால், கனடிய அரசு மட்டும் அதை அங்கீகரிக்க மறுப்பதாக வேதனையுடன் கூறியுள்ளார்.
http://news.lankasri.com/canada/03/134430
Geen opmerkingen:
Een reactie posten