600 ஆண்களுடன் செல்பி எடுத்த பெண் , காரணம் ஆண் ஆணாக உள்ளானா பெண்ணாகிவிட்டானா என்பதை உலகுக்கு காட்டவாம்!
நெதர்லாந்தின் ஆம்ஸ்டிராமை சேர்ந்த 20 வயதுப்பெண் நோயா ஜான்ஸ்மா .
இவர் ஒரு வித்யாசமாக சோதனை செய்துள்ளார்.வீதிகளில் பெண்களிடம் பாலியல் சீண்டல் செய்யும் ஆண்களுடன் இவர் செல்பி எடுப்பார். அதை சமூக வளைதளங்களில் பதிவிட்டு அவர்களை பற்றிய விவரங்களையும் வெளியிடுவார். இதன் மூலம் பல பெண்களுக்கு அவர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.இவர் வைத்திருக்கும் இன்ஸ்டாகிராம் பக்கத்தை 45, 000 பேர் பின் தொடர்கிறார்கள்.
இந்த பக்கத்திற்கு அவர் ‘ டியர் கேட் காலர்ஸ் (dear catcallers) என்று பெயர் வைத்துள்ளார்.
இதுவரை ஒரு ஆண் கூட அவர் ஏன் செல்ஃபி எடுக்கிறார் என்று கேட்கவில்லை. அனைவரும் அவரிடம் ஒட்டி உரசிக்கொண்டு செல்ஃபி எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
http://www.manithan.com/gossip/04/143998

Geen opmerkingen:
Een reactie posten