தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 7 oktober 2017

"அவுஸ்திரேலியாவில் இருந்து நாடு கடத்தப்பட்டவர் கைது"


கடல் வழியாக அவுஸ்திரேலியாவுக்கு சென்று அங்கிருந்து திருப்பி அனுப்பி வைக்கப்பட்ட ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபர் நேற்று மினுவாங்கொட நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டார்.

அவரை ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணையில் விடுவிக்குமாறு நீதவான் ஷிலானி சத்துரந்தி பெரேரா உத்தரவிட்டுள்ளார்.

மேலும் சந்தேக நபரை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 6ஆம் திகதி மினுவாங்கொடை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.

கடந்த 2012ஆம் ஆண்டு திருகோணமலையில் இருந்து ஆழ்கடல் மீன்பிடி படகு மூலம் சந்தேக நபர் அவுஸ்திரேலியாவுக்கு சென்றுள்ளார்.

அவுஸ்திரேலியாவில் சில காலம் தொழில் புரிந்து வந்த சந்தேக நபரை அந்நாட்டு பாதுகாப்பு தரப்பினர் கைது செய்து இலங்கைக்கு நாடு கடத்தியுள்ளனர்.

இதற்கு அமையவே சந்தேக நபரை குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

http://www.tamilwin.com/community/01/160954

Geen opmerkingen:

Een reactie posten