தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 26 oktober 2017

பிரித்தானியாவில் இருந்து விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினரை நாடுகடத்த முடிவு


மருத்துவ சிகிச்சை பெற வலியுறுத்தி பிரித்தானியாவில் புகலிடம் கோரியுள்ள விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினரை நாடு கடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

அரசத் தலைமை சட்டத்தரணி அளித்த கருத்துகளின் அடிப்படையில் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சர்வதேச ஊடகங்களை மேற்கோள்காட்டி கொழும்பு ஊடகம் ஒன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

இலங்கையில், கடந்த அரசாங்கத்தில் அளித்த உளவியல் சித்திரவதையால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் தமக்கு பிரித்தானியாவில் சிகிச்சை பெற அனுமதி அளிக்க வேண்டும் என விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் கோரிக்கை விடுத்துள்ளார்.

எனினும், பிரித்தானியா புகலிடம் அளிக்க மறுப்பு தெரிவித்துள்ளது.
இதனிடையே குறித்த நபர் தொடர்பில் அதிகாரி ஒருவர் கருத்து தெரிவிக்கையில், பிரித்தானியாவில் சிகிச்சை மறுக்கப்பட்டால் கண்டிப்பாக அவர் நாடு திரும்பிய பின்னர் தற்கொலை செய்துகொள்ளும் நிலையே ஏற்படும்.

பிரித்தானிய நீதிபதிகள் குறித்த நபரின் கோரிக்கையை மிகவும் அசாதாரணமான வழக்காக கருதவேண்டும் எனவும் அவர் கோரிக்கை வைத்துள்ளார்.

எனினும், அத்தகைய நிலையில் குறித்த நபர் இல்லை என அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர் என அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, அண்மைக்காலமாக அதிகளவான புகலிட கோரிக்கையாளர்களினால் ஐரோப்பிய ஒன்றியம் கடுமையான அரசியல் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது.

கடந்த 2015ஆம் ஆண்டு மாத்திரம் 10 இலட்சத்திற்கும் மேலான அகதிகள் ஐரோப்பிய ஒன்றியத்தில் வந்து சேர்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.tamilwin.com/community/01/162925?ref=rightsidebar-lankasrinews

Geen opmerkingen:

Een reactie posten