தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 31 oktober 2017

அகதிகள் கொள்கையில் ஜேர்மனியை புகழ்ந்த ஐ.நா!


ஜேர்மன் நாட்டின் அகதிக்கொள்கைகள் குறித்து ஐநா அகதி நிறுவனம் பாராட்டியுள்ளதோடு மட்டுமல்லாமல் மேற்கொண்டு கொள்கைகளை மேம்படுத்துவதற்கு அழைப்பு விடுத்துள்ளது.

ஐ.நா அகதி நிறுவனத்தின் ஜேர்மன் கிளையானது, அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்கு பின்னர் புகலிடம் கோருவோர் குடும்பத்திற்கு மறுசீரமைப்பு தொடர்பான உரிமைகளை அளிக்க வேண்டும் என பாராளுமன்றத்தின் புதிதாக தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களை வலியுறுத்தியுள்ளது.

நாட்டிற்கு வரும் அகதி மக்களுக்கு, சமூக மற்றும் பொருளாதார ஆதரவுகளை வெற்றிகரமாக ஒருங்கிணைத்து கொடுப்பது ஆகியவற்றினை அடிப்படையாக கொண்டு செயல்பட வேண்டும் என UNHCR தெரிவித்துள்ளது.
ஐரோப்பிய நாடுகளிலேயே ஜேர்மன் நாட்டில் தான் அகதிகளின் வருகை அதிகரித்துள்ளதோடு மட்டுமல்லால், அவர்களுக்கு தேவையான உதவிகளும் செய்து கொடுக்கப்பட்டு வருகின்றன.

2015 ஆம் ஆண்டில் 0.2 சதவீதம் அகதி மக்கள் ஜேர்மனியில் வசித்துள்ளனர், இதன் சதவீதம் 2016 ஆம் ஆண்டில் 0.5 ஆக அதிகரித்தது, 2017 ஆம் ஆண்டிலும் இதே சதவீதத்தை ஜேர்மன் நாடு தக்கவைத்துக்கொண்டது.

சுவிஸ், நெதர்லாந்து, பெல்ஜியம், இத்தாலி, ஸ்வீடன், ஆஸ்த்ரியா ஆகிய நாடுகளில் ஆரம்பத்தில் அகதிகளின் எண்ணிக்கை அதிகளவில் இருந்தாலும், கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்நாடுகளில் இருந்த அகதிகள் வேறு நாடுகளுக்கு தஞ்சம் அடைந்துள்ளனர் என UNHCR தெரிவித்துள்ளது.

http://news.lankasri.com/germany/03/135713

Geen opmerkingen:

Een reactie posten