குறிப்பாக தேசிய இனப்பிரச்சினைக்கு புதிய அரசியல் அமைப்பில் எவ்வாறான தீர்வுகள் முன்வைக்கப்பட போகின்றன என்ற விடயம் வலுப்பெற்றுள்ளது.
மொழி, காலாசாரம், பொருளாதாரம், நிலம் மற்றும் மக்கள் கூட்டம் என்பனவே ஒரு இனத்தை தாங்குகின்ற பிரதான தூண்களாக உள்ளன. இந்த தூண்கள் அழிக்கப்படும் போதுதான் இனப்பிரச்சினை ஏற்படுகின்றது.
எனவே, இனப்பிரச்சினைக்கான தீர்வு என்பது இந்த தூண்கள் அழிக்கப்படுவதில் இருந்து எவ்வாறு பாதுகாத்துகொள்ளுதல் என்பதுதாக.
இந்நிலையில், இந்த தூண்களையும் பாதுகாப்பதற்கு சர்வதேச நாடுகள் குறிப்பாக சுவிஸ், பிரித்தானியா, அமெரிக்கா, கனடா போன்ற நாடுகள் எவ்வாறான நடவடிக்கைகளை எடுத்துள்ளன..?
அவ்வாறான நடவடிக்கைகள் இலங்கைக்கு எந்த வகையில் ஏற்புடையதாக இருக்கும்..? போன்ற பல்வேறு விடயங்களை இலங்கையின் அரசியல் துறை பேராசிரியர் ஜோதிலிங்கம் அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளார்.
மலையக சமூக ஆய்வு மையம் கொழும்பில் நடத்திய விஷேட செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட அவர் இந்த விளக்கங்களை தெளிவுபடுத்தியுள்ளார்.
https://www.youtube.com/watch?list=PLXDiYKtPlR7PVAIoezVwVQuWbGuD6BWjY&v=IrLSGR4AekI
http://www.tamilwin.com/special/01/128740?ref=morenews

Geen opmerkingen:
Een reactie posten