தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 19 december 2016

வல்வையில் ஆயுதப் போராட்டத்தை ஆரம்பித்துவைத்த எதிர்க்கட்சித் தலைவர் அ. அமிர்தலிங்கம்



1977 ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் முதல் தடவையாக வல்வெட்டித்துறையில் ஒற்றுமைப்படுத்தப்பட்டு “தமிழர் விடுதலைக் கூட்டணியாக” தோற்றம் பெற்று வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை அடிப்படையாகக் கொண்டு “தமிழர் பிரச்சினைக்கு தமிழீழமே தீர்வு” என்பதனை தேர்தல் விஞ்ஞாபனத்தில் முன்வைத்து, உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட...்டதால், 99 வீதத்திற்கும் அதிகமான தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்று,முதல் தடவையாக இலங்கைப் பாராளுமன்றத்தில் தமிழர் ஒருவர் எதிர்க்கட்சித் தலைவராக வந்தமை இலங்கையின் அரசியல் வரலாற்றில் முக்கியமான ஒரு காலகட்டமாகும்.
1977 ஆம் ஆண்டு தேர்தல் வெற்றியைக் கொண்டாடும் வகையில் வடக்கு கிழக்கில் இருந்து தமிழர் விடுதலைக் கூட்டணியின் சார்பில் வெற்றி பெற்ற இருபத்திரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களும்,கட்சிகளின் தலைவர்களும் கலந்து கொண்ட வெற்றிவிழா வல்வெட்டித்துறை ரேவடி கடற்கரை மைதானத்தில் நடைபெற்றது.அதில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளரும்,எதிர்க்கட்சித் தலைவருமாக தெரிவு செய்யப்பட்ட அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் அவர்கள் அங்கு கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் பேசும் பொழுது,

“இன்று நாங்கள் பெற்ற வெற்றி மக்களின் வெற்றி….. தமிழீழத்திற்கான நீங்கள் தந்த ஆணை…அந்த ஆணையில் இருந்து நாங்கள் ஒரு போதும் விலகிச் செல்ல மாட்டோம் ….. சாத்வீகமான முறையில் இதனை அடைவது என்பது முடியாத காரியம் …மகாத்மா சாந்தியின் சாத்வீகமான போராட்டத்தில் சுபாஸ் சந்திரபோஸ் எவ்வாறு போராடி னாரோ அதே போன்ற அணுகு முறையை நாங்களும் கைக்கொள்ள வேண்டும்…அதற்கான ‘சரக்கு’ இங்கே வல்வெட்டித்துறையில் தான் இருக்கின்றது…… உங்களில் இருந்து 5000 இளைஞர்கள் ஆயுதம் எந்தத் தயாராகுவீர்கள் ஆனால் நாங்கள் எமது பதவிக் காலத்திற்குள் தமிழீழத்தை ப் பெற்றுத் தருவோம்……”
என்று அன்றைய வெற்றி விழாக் கூட்டத்தில் எதிர்க்கட்சித்தலைவர் அ.அமிர்தலிங்கம் அவர்கள் பேசிய உணர்ச்சியூட்டும் வீரவசனங்களைக் கேட்டதும்,அந்தக் கடற்கரையில் கூடியிருந்த மக்களிடம் இருந்து எழுந்த கரகோசமும், மகிழ்ச்சியும் வானைப் பிளந்தததை அன்று அங்கே இருந்தவர்கள் மறந்திருக்க மாட்டார்கள்……அவரை அடுத்து உரையாற்றிய உணர்ச்சிக் கவிஞர் காசிஆனந்தன்,

“நாங்கள்சிங்கள பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியாக இருக்கப்போவதில்லை…எதிரிக்கட்சியாகவே இருக்கப் போகின்றோம்….. இன்றைய இளைஞர்கள் எங்களுடைய வழியைப் பின்பற்றினால்த,மிழீழம் என்பது தூரத்தில் இல்லை…..”

உணர்ச்சி மிக்க பாடல்களினால்த,மிழ் மக்களின் நெஞ்சத்தில் இடம் பிடித்த ஒரு கவிஞர் என்ற வகையில் அவரது உரை இளைஞர்களின் உணர்ச்சியைத் தூண்டிவிட்டது……அவரது வீரமிக்க துணிச்சலான உரையைக் கேட்டதும்>கம்பர்மலையைச் சேர்ந்த இரவீந்திரன் என்ற இளைஞன் திடீரென மேடையில் ஏறி தான்வைத்திருந்த சிறிய வில்லுக் கத்தியினால்> தனது விரலைக் கீறி> கவிஞர் காசி ஆனந்தனின் நெற்றியில் இரத்தத் திலகமிட்டு தனது மகிழ்ச்சியைத் தெரிவித்தார்……..அன்று தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர்களின் வீரமிக்க உரைகளினால் தூண்டப்பட்ட அந்த இளைஞன் தான் பிற்காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முக்கியமான ஒரு போராளியாகத் திகழ்ந்து வீரச்சாவடைந்த “கப்டன் பண்டிதர்” ஆவர்……..ஆக தமிழ் இளைஞர்களைத் தூண்டி, ஆயுதம் ஏந்த வைத்து தனக்குக் கீழ் ஒரு “கூலிப்படையாக” வைத்திருக்க விரும்பிய அ.அமிர்தலிங்கம்> அவர்கள் நினைத்தது ஒன்று நடந்ததோ வேறோன்றாக இருந்ததால்> தமிழினம் அந்த நேரம் எந்த அன்னிய சக்திகளுக்கும் அடிமையாகாது இருந்தது….. அந்த நேரம் வெற்றிக்களிப்பில் மிதந்த தமிழ் தலைவர்கள் தமிழர்களின் பிரச்சினைகளும்>அவற்றிற்கான தீர்வுகளும், தமது கரங்களை விட்டுக் கைமாறும் என்பதை அப்போது நினைத்துப் பார்க்கவில்லை. ஆனால்த,மிழ் உணர்வு மிக்க இளைஞர்களின் எதிர்பார்க்கைகள்>அன்றைய தமிழ் தலைவர்களின் அபிலாசைகளில் இருந்தும் முற்றாகவே வேறுபட்டதாக இருந்ததால்> இளைஞர்கள் அவர்களிடம் இருந்து விலகிச் செல்லத் தொடங்கினர்….அவர்களிடையே பிரபாகரன் அவர்களின் தலைமையில் ஒரு தனித்துவமான தலைமைத்துவத்தைக் கொண்டதாக தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்திப் போராடமுன் வந்தமைக்கு> அன்று அ.அமிர்தலிங்கம் போன்ற தமிழ் தலைவர்களின் தூண்டுதலே காரணமாக இருந்தது என்பதுதான் யாதார்த்தம்.

(ஆதாரம்:“வல்வைப் புயல்”-வல்வை. ஆனந்தன்)

Geen opmerkingen:

Een reactie posten