தமிழ் மற்றும் சிங்கள மொழி ஆகிய இரண்டையும் அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ மொழியாக மாற்றுவது தொடர்பில் அரசியல் நிர்ணய சபை யோசனை ஒன்றை முன்வைத்துள்ளது.
குறித்த விடயம் தொடர்பில் அறிக்கை ஒன்றை இன்று வெளியிட்டுள்ள அவர் இவ்வாறு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இலங்கையில், சிங்கள் மக்கள் பெரும்பான்மை இருப்பதன் காரணமாக சிங்கள மொழி அரச கரும மொழியாக பயன்படுத்தப்படுகின்றது.
எனினும், வடக்கு மற்றும் கிழக்கில் தமிழ் மக்கள் அதிகமாக வாழ்வதன் காரணமாக 1957ஆம் ஆண்டு தமிழ் மொழியை வட கிழக்கு மாகாணங்களின் அரச கரும மொழியாக்குவது தொடர்பான தீர்மானம் முன்வைக்கப்பட்டது.
தந்தை செல்வாவினால் இந்த யோசனை முன்வைக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ள அவர், இந்தியாவில் பல மொழிகள் இருந்தும் ஹிந்தியே அரச கரும மொழியாக பயன்படுத்தப்படுவதாகவும் வலியுறுத்தியுள்ளார்.
கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக இலங்கையில் இருக்கும் சட்டங்களை மாற்றுவதற்கு நல்லாட்சி அரசாங்கம் முயற்சிக்க வேண்டாம் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
அத்துடன், தமிழ் மற்றும் சிங்கள மொழிகளை அரச கரும மொழியாக மாற்றும் யோசனைக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் ஆதரவளிக்க கூடாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, புதிய அரசியல் சாசனத்தை தயாரிக்கும் பணிகளில் நல்லாட்சி அரசாங்கம் விசேட கவனம் செலுத்த வேண்டும் என மஹிந்த ராஜபக்ச தனது அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.
Geen opmerkingen:
Een reactie posten