தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 14 december 2016

பிரித்தானியாவில் பறிக்கப்படப்போகும் தமிழர்களின் விசாக்கள்!

பறிக்கப்படப்போகும் தமிழர்களின் விசாக்கள்!

பிரித்தானியாவில் குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தினால் விசா தொடர்பான சில அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் பிரகாரம் அகதி தஞ்ச நிரந்தர விண்ணப்பங்களுக்காக விண்ணப்பித்தவர்களுக்கும், பல காலமாக நிரந்தர வதிவிட உரிமைக்கு விண்ணப்பித்து காத்துக் கொண்டிருந்த சிலருக்கும் குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தினால் கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
அக் கடிதத்தில் இவர்களது அகதி அந்தஸ்தை நிறுத்துவதற்கான முடிவை ஏற்படுத்த உத்தேசித்து உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன் காரணத்தால் அதை தடுக்க விண்ணப்பதாரர்கள் தகுந்த காரணத்தை எழுத்து வடிவில் உடனடியாக அனுப்பி அதனை தடுக்க முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.
அவ்வாறு நடவடிக்கை எடுக்கப்படா விட்டால் இவர்களது அகதி அந்தஸ்து சட்ட விதி 1c of the Refugee Convention கீழ் நிராகரிக்கப்பட உள்ளதாகவும் Vasuki muruhathas தெரிவிக்கின்றார்.
இதனால் விண்ணப்பகாரர்கள் திருப்பி அனுப்பப்பட்டால் அவர்களது உயிருக்கு ஆபத்து இல்லை என்பதாக இவர் மேலும் கூறுகின்றார்.
இதற்கான காரணம் தற்பொழுது இலங்கையில் சுமூகமான நிலைக் காணப்படுவதால் இந்த முடிவை எட்டுவதற்கு காரணமாக அமைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்தோடு இவர்களது வழக்குகளும் மீண்டும் பரிசீலித்தாலும் அவர்களுக்கு பிரச்சினைகள் இருக்கப்பட மாட்டாது என தெரிவிக்கின்றார்.
மேலும் இதன் மூலம் இவர்களது அகதி அந்தஸ்தை பறிக்கப்படுவதாக இருந்தால் மீளாய்வு மனுவை UNCHR க்கு அனுப்ப கூடாது என்பதனை பரிந்துரைப்பதற்கான சந்தர்ப்பமும் வழங்கப்படுகின்றது.
இக் காரணங்கள் சகலருக்கும் உறித்தாகாவிட்டாலும் ஒரு சிலருக்கு மட்டும் அவர்களது வழக்குகளின் தன்மைகளிலேயே இம் முடிவு எடுக்கப்படலாம் என்பதால் இவ்வாறான விண்ணப்பதாரர்களே உங்களுடைய முகவரிகள் மாற்றப்பட்டாலோ அல்லது சட்டத்தரணி முகவரிகள் மாற்றப்பட்டாலோ உடனடியாக குடிவரவு, குடியகல்வு திணைக்களத்திற்கு தெரிவிக்குமாறு கேட்கப்படுகின்றார்கள்.
பிழையான தகவலின் அடிப்படையில் அகதி அந்தஸ்து பெற்றிருந்தாலோ அல்லது கிரிமினல் குற்றங்களில் ஈடுபட்டிருந்தாலே அவர்களது அகதி அந்தஸ்துக்களும் பறிக்கப்படலாம் என கூறப்பட்டுள்ளது.
மேற்படி தகவலை சட்டத்தரணி ஒருவர் உறுதிப்படுத்தினார்.
- See more at: http://www.asrilanka.com/2016/12/12/37288#sthash.KfUwptGr.dpuf

லண்டனில் தமிழர்களுக்கு காத்திருக்கும் பேராபத்து...! விரைந்து செயற்படுமாறு எச்சரிக்கை


பிரித்தானியாவில் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தினால் விசா தொடர்பான சில அதிரடி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானிய ஊடகங்களை மேற்கோள்காட்டி இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
அகதி அந்தஸ்தை நிறுத்துவதற்கான முடிவை உத்தேசித்துள்ளதாக தெரிவித்து, அகதி தஞ்சம் கோரி விண்ணப்பித்துள்ளவர்களுக்கும், நிரந்தர வதிவிட உரிமைக்கு விண்ணப்பித்துள்ளவர்களுக்கும் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பிரித்தானிய குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தினால் இந்த கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பிரித்தானிய ஊடகங்களை மேற்கோள்காட்டி செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், விண்ணப்பதாரர்கள் உரிய காரணத்தை விரைவில் எழுத்து வடிவில் சமர்பித்து அதனை தடுத்துகொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. தவறும் பட்சத்தில் அகதி அந்தஸ்து சட்ட விதியின் கீழ் விசா நிராகரிக்கப்பட உள்ளதாக கூறப்படுகின்றது.
மேலும், விண்ணப்பதாரர்கள் திருப்பி அனுப்பபட்டால் அவர்களின் உயிருக்கு ஆபத்து இல்லை எனவும், இலங்கையில் தற்போது சுமூகமான நிலை காணப்படுவதனால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
இதன் மூலம் அகதி அந்தஸ்தை பறிக்கப்படுவதாக இருந்தால் மீளாய்வு மனுவை UNCHR க்கு அனுப்ப கூடாது என்பதனை பரிந்துரைப்பதற்கான சந்தர்ப்பமும் வழங்கப்படுகின்றது.
இந்நிலையில், விண்ணப்பதாரர்களின் முகவரிகள் மாற்றப்பட்டாலோ அல்லது சட்டத்தரணி முகவரிகள் மாற்றப்பட்டாலோ உடனடியாக குடிவரவு, குடியகல்வு திணைக்களத்திற்கு அறிவிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
போலியான தகவலின் அடிப்படையில் அகதி அந்தஸ்து பெற்றிருந்தாலோ அல்லது குற்றவியல் குற்றங்களில் ஈடுபட்டிருந்தாலே அகதி அந்தஸ்து பறிக்கப்படலாம் என சட்டத்தரணி ஒருவர் உறுதிப்படுத்தினார் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, அகதி அந்தஸ்து குறித்து சட்ட ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளவும், அதற்கான ஏற்பாடுகளும் பிரித்தானிய சட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ளது.
எனவே, தமது நிரந்தர இருப்பை தக்கவைத்துக்கொள்ள வேண்டும் எனில் ஒவ்வொரு ஈழத்தமிழர்களும் விரைந்து செயற்பட்டு சட்ட ஆலோசனைகளை பெற்றுக்கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/special/01/128108

Geen opmerkingen:

Een reactie posten