கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் 12 வயதான தமிழ் சிறுமி படுகாயமடைந்திருந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விபரங்களை பிரான்ஸ் ஊடகங்களை மேற்கோள் காட்டி செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன.
Bondy நகரை ஊடறுத்து செல்லும் அதிவேக நெடுஞ்சாலையிலிருந்தே இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், AK47 வகை துப்பாக்கியால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் சிறுமி துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகியுள்ளதாகவும், இதற்கான காரணம் ஏதுவும் வெளியாகவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், குறித்த சம்பவம் தொடர்பில் அந்நாட்டு பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இதேவேளை, சிறுமி வீட்டுக்கு அழைத்து செல்ல வைத்தியர்கள் அனுமதி வழங்கியுள்ள போதிலும், ஏனைய பிள்ளைகள் மிகவும் அச்சத்துடன், இருப்பதாக சிறுமியின் தாயார் அந்நாட்டு ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், தாம் உள்ளிட்ட குடும்பத்தினர் வேறு பகுதியில் குடியேருவதற்கு முயற்சித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Geen opmerkingen:
Een reactie posten