தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 3 december 2016

போர்க்குற்றச்சாட்டுகளிலிருந்து இலங்கையை காப்பாற்றும் நாடுகள் எவை?

இலங்கைக்கு பொருத்தமான புதிய அரசியலமைப்புகள் தயாரிக்க முடிந்தால், நாட்டிற்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள யுத்த குற்றச்சாட்டுகளை நீக்கிக் கொள்ள முடியும் என பிரபல 6 நாடுகள் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
அமெரிக்கா, பிரித்தானியா, ஜேர்மன் பிரான்ஸ், கனடா மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளே இதனை சுட்டிக்காட்டியுள்ளது.
பெரும்பான்மையினர் போன்று சிறுபான்மையினரின் உரிமை பாதுகாக்கப்படும் வகையில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என இதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போது வரையில் வடமாகாண சபையில் ஏற்பட்டுள்ள பல்வேறு சிக்கலான அழுத்தங்கள், புதிய அரசியலமைப்புடன் ஒத்துப்போகும் என இதன் மூலம் நம்பிக்கை வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

Geen opmerkingen:

Een reactie posten