தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 8 augustus 2016

இலங்கை அகதிகள் அவுஸ்திரேலியா பயணிப்பதற்காக மேற்கொள்ளும் காரியம் தொடர்பான அதிர்ச்சி தகவல்...

அவுஸ்திரேலியாவுக்கு படகுகள் மூலம் செல்வதற்காக இலங்கை அகதிகள், தமது சிறுநீரகங்களை விற்பனை செய்துவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அவுஸ்திரேலியாவின் நியூஸ்கோப் என்ற செய்திசேவை, இந்த செய்தியை வெளியிட்டுள்ளது
கடந்த 3 வருடங்களாக தாம் மேற்கொண்டு ஆய்வின்படி இந்த தகவல்கள் வெளியாகியுள்ளதாக அந்த சேவை குறிப்பிட்டுள்ளது.
கடந்த மூன்று வருடங்களில் சுமர் 500 இலங்கை அகதிகள், 3000 டொலர்கள் என்ற விலைகளில், அவுஸ்திரேலியாவுக்கான தமது படகு பயணங்களுக்காக சிறுநீரகங்களை விற்பனை செய்துள்ளதாக, அவுஸ்திரேலியாவில் உள்ள அகதிகளின் ஆர்வலரான சாமுவேல் சந்திரஹாசன் தெரிவித்துள்ளார்.
தமக்கு கிடைத்த தகவல்களின்படி கொழும்பில் உள்ள வைத்தியசாலைகளிலேயே சிறுநீரகங்கள் அகற்றப்படுகின்றன என்றும் சந்திரஹாசன் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, நியூஸ்கோப்பின் ஆய்வின்படி, அவுஸ்திரேலியாவில் சிறுநீரகங்களுக்கான கேள்வி உள்ள நிலையில் சுமார் 100 அவுஸ்திரேலியர்கள், சிறுநீரக கொள்வனவுக்காக பணம் செலுத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகளிடம் நியூஸ்கோப் வினவியபோது, தமது உறவினர்கள், அவுஸ்திரேலியா செல்வதற்காக சிறுநீரகங்களை விற்பனை செய்வது தமக்கு தெரியும் என்று குறிப்பிட்டுள்ளனர்.
சிலர், தமது பிள்ளைகளை அவுஸ்திரேலியாவுக்கு அனுப்புவதற்காக சிறுநீரகங்களை விற்பனை செய்வதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதேவேளை ஒவ்வொரு வருடமும் மனித உடலுறுப்புகளை பெற்றுக்கொள்வதற்காக இஸ்ரேல், மலேசியா, மாலைத்தீவு என்று பல நாடுகளின் சுமார் 1000 பொதுமக்கள், இலங்கைக்கு வருகின்றனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

You may like this video

Geen opmerkingen:

Een reactie posten