குறித்த நபரின் பெயர் இன்டர்போல் சிவப்பு பட்டியலில் இருப்பதாகவும், இவர் டொரண்டோ பகுதியில் வாழ்வதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இன்டர்போல் சிவப்பு பட்டியல் 2010ஆம் ஆண்டு வெளியிட்டிருந்த தகவலின்படி, பயங்கரவாதம் என்ற பட்டியிலில் “ரவிசங்கர் கனகராஜா” என்ற 43 வயதுடைய இலங்கை பிரஜையை பற்றி வெளியிட்டுள்ளது.
இதேவேளை ரவிசங்கர் கனகராஜா தொடர்பிலான இந்த அறிக்கை தற்போது இன்டர்போல் வலைதளதத்தில் தேடப்படும் நபர்களின் பட்டியலில் இடம் பெற்றுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவர் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்காக கப்பல்கள் மூலம் ஆயுதங்களை கடத்தினார் என்றும் இந்தக் குற்றச்சாட்டிற்காக 30 வருட சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை ஊடகம் செய்தி வெளியிட்டிருந்தது.
அத்துடன் ரவிசங்கர் பயங்கரவாத குழுவின் தலைவர் என இலங்கை அரசாங்கம் தகவல் வெளியிட்டுள்ளது.
சீ.டி.வி டொரண்டோ ஊடகம் ரவிசங்கரின் சகோதரனுடைய மனைவியிடம் இது தொடர்பாக கேள்விகளை எழுப்பியது, இதற்கு பதிலளிக்கையில்
”தற்போது அவர் கிச்னர் பகுதியில் வாழ்ந்து வருகின்றார், ரவிசங்கரைத் தொடர்புகொள்ள பல முறை முயற்சித்த போதும் அது பலனளிக்கவில்லை” என்று அவர் சீ.டி.வி டொரண்டோவிடம் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் சீ.டி.வி டொரண்டோ அவரது வழக்கறிஞர் கோப்லன்டிடம் தொடர்புக் கொண்ட போது,
“அவர் தற்போது கனேடிய குடியுரிமை பெற்றுள்ளார். இருப்பினும் எந்த சூழ்நிலையின் காரணமாக இவர் கனேடிய குடியுரிமை பெற்றார் என்றும் அவர் வேறு பெயரை பயன்படுத்தியுள்ளாரா என்று தனக்கு தெரியாது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கனகராஜா வழக்கு தொடர்பில் குடிவரவு அதிகாரிகள் தகவல் தர மறுத்துள்ளனர் என வழக்கறிஞர் கூறினார். மேலும், பயங்கரவாதத்தின் கீழ் ரவிசங்கரை கைது செய்ய திர்மானித்துள்ளனர். ஆனால் இலங்கையில் இடம் பெற்ற உள்நாட்டு யுத்தம் பயங்கரவாதத்துடன் தொடர்புடையதல்ல எனவும் அவரை பயங்கரவாதி என கூற முடியாது என்றும் வழக்கறிஞர் கூறியுள்ளார்.
ஆனால் இந்த கதை தொடர்பான பேட்டிக்கு கனடாவின் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரல்ப் குடேல் மறுத்துள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனடாவில் வாழ்கின்றதாக கருதப்படும் ரவிசங்கர் கனகராஜாவை இது வரையில் இனங்காணவில்லை எனவும் சீ.டி.வி டொரண்டோ தகவல் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Geen opmerkingen:
Een reactie posten