தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 10 augustus 2016

இலங்கையை தமிழீழமாக குறிப்பிட்ட அவுஸ்திரேலியா! அதிருப்தியில் அரசாங்கம்

அவுஸ்திரேலிய அரசாங்கம் 2016 ஆம் ஆண்டுக்கான மக்கள் கணக்கெடுப்புக்காக இலங்கையை தமிழீழம் என்று குறிப்பிட்டுள்ளது.
பல நாடுகளில் இருந்து அவுஸ்திரேலியாவில் குடியேறி குடியுரிமை பெற்றுக்கொண்டவர்களின் நாடுகளை கணக்கெடுப்பின் போது அறிந்து கொள்ளுமாறு அவுஸ்திரேலிய வெளிவிவகாரம் மற்றும் வர்த்தக திணைக்களம் ஆலோசனை வழங்கியிருந்தது.
இதனடிப்படையில், அவுஸ்திரேலிய புள்ளிவிபரத் திணைக்கள அலுவலகத்தில் இலங்கையை ஸ்ரீலங்கா என்றும் தமிழீழம் என்றும் 7107 என்ற இலக்கத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இது குறித்து அவுஸ்திரேலியாவில் வசிக்கும் இலங்கையரான ரஞ்சித் சொய்சா என்பவர் அவுஸ்திரேலிய பிரதமர், பிரதிப் பிரதமர், அமைச்சர்கள், சட்டமா அதிபர் ஆகியோரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.
இலங்கையில் தமிழீழம் என்ற நாடு இல்லை எனவும் தனிநாடு கோரி போராட்டம் நடத்திய தமிழீழ விடுதலைப் புலிகள் 2009 ஆம் ஆண்டு தோற்கடிக்கப்பட்டு விட்டதாகவும் உலகில் எந்த நாடும் தமிழீழத்தை அங்கீகரிக்கவில்லை எனவும் சொய்சா கடிதம் ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளார்.
சொய்சாவின் கோரிக்கைக்கு அமைய கன்பராவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் அலுவலகம், அவுஸ்திரேலிய அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளது.
இதனையடுத்து தமிழீழம் என்ற பெயரை நீக்குவதாக அவுஸ்திரேலிய அரசாங்கம், இலங்கையின் பிரதி உயர்ஸ்தானிகர் நிமாலி கருணாதிலக்கவுக்கு அறிவித்துள்ளது.
இதேவேளை இந்த முறைப்பாட்டை அடுத்து, தமிழீழம் என்னும் வார்த்தையை அவுஸ்திரேலிய புள்ளிவிபரத்திணைக்கள இணையத்தளத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

Geen opmerkingen:

Een reactie posten