தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 10 augustus 2016

“தாய்நாட்டில் பாதுகாப்பு இல்லை”: புகலிடம் தேடி ரஷ்யாவிற்கு சென்ற குடும்பம்

ஜேர்மனி நாட்டில் பாதுகாப்பு இல்லை என்ற காரணத்தால் அந்நாட்டை சேர்ந்த குடும்பத்தினர் புகலிடம் கோரி ரஷ்ய நாட்டிற்கு சென்றுள்ளனர்.
ஜேர்மனியில் வசித்து வந்த Andre drove, Carola Griesbach தம்பதியினர் மற்றும் இவர்களது இரண்டு மகள்கள், பேரப்பிள்ளைகள் ஆகியோர், கடந்த 2015 ஆம் ஆண்டு ரஷ்ய தலைநகரான மாஸ்கோவிற்கு பயணித்துள்ளனர்.
அந்நாட்டிற்கு சென்ற இவர்கள், எங்கள் தாய்நாடான ஜேர்மனியில் எங்களுக்கு பாதுகாப்பு இல்லை, மேலும் எங்கள் குழந்தைகள் வளர்வதற்கான பாதுகாப்பான சூழல் அங்கு இல்லை என்று கூறியுள்ளனர்.
இதற்கு அவர்கள் முன்வைக்கும் காரணம் என்னவென்றால், ஜேர்மன் நாட்டில் அளவுக்கதிமான குடியேறிகள் வந்துள்ளனர். இதனால் அந்நாட்டில் வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ளதால், எங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறியுள்ளனர்.
அதனால், ரஷ்யாவில் தங்குவதற்கும், வேலை பார்ப்பதற்கும் எங்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என அந்நாட்டு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் ரஷ்ய அரசாங்கம், 'மக்கள் பாதுகாப்பாக வசிப்பதற்கு ஏற்ற நாடு தான் ஜேர்மன்" எனக்கூறி இவர்களது கோரிக்கையை நிராகரித்துள்ளது.
தற்போது இக்குடும்பத்தினர் ரஷ்யாவில் உள்ள சிறிய ஹொட்டலில் தங்கியுள்ளனர், தங்கள் குடும்பத்தின் நிலை குறித்து Andre drove கூறியதாவது, ஜேர்மனியில் பணிக்கு ஆட்களை தெரிவு செய்யவேண்டுமென்றால் அதிகமான தகுதிகளை பணியாளர்களிடம் இருந்து எதிர்பார்க்கிறார்கள்.
ஆனால், ரஷ்யாவில் அப்படி கிடையாது, விரைவில் வேலை கிடைத்துவிடுகிறது, கடந்த 2013 ஆம் ஆண்டில் செப்டம்பர் முதல் டிசம்பர் வரை ஜேர்மன் நாடாளுமன்றத்தின் வெளிப்பகுதியில் நின்றுகொண்டு, குடியேறிகளை ஏற்கவேண்டும் என போராட்டம் நடத்தினோம், ஆனால் அவையெல்லாம் பலனளிக்காதது வேதனையளிக்கிறது.
அதற்கு பிறகும், ஜேர்மனியில் குடியேறிகள் வந்த வண்ணம் உள்ளனர், ஆனால் இதனை தடுக்க ஏஞ்சலா மெர்க்கல் தலைமையிலான அரசு எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் இருக்கிறது.
ரஷ்யாவில் நாங்கள் தற்போது மகிழ்ச்சியாக இருக்கிறோம், இந்நாட்டு மக்கள் மிக அன்புடம் பழகுகின்றனர். ஆனால் ஜேர்மன் மக்கள் சுயநலவாதிகளாக இருப்பார்கள் என தங்கள் நாட்டுக்கு எதிரான கருத்துகளை இவர்கள் கூறியுள்ளனர்.
அதுமட்டுமின்றி, ரஷ்ய ஜனாதிபதி புடின் மிகச்சிறந்த தலைவர், அவர் தங்கள் நாட்டு மக்களுக்கு தேவையான திட்டங்களை அமல்படுத்தி வருகிறார் என கூறியுள்ளனர்.

Geen opmerkingen:

Een reactie posten