சனல் 4 தொலைக்காட்சியில், ஒளிபரப்பி உலகை உலுக்கிய வீடியோவுக்கு ஒப்பான ஒரு வீடியோ தற்போது உலாவருகிறது. சனல் 4 ஒளிபரப்பிய வீடியோ உண்மையாகவே எடுக்கப்பட்டது. ஆனால் உண்மைச் சம்பவம் ஒன்றை கிராபிக் சித்திரம் போல சித்தரித்து இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. இது பிரான்ஸ் நாட்டில் பரவலாக எல்லா இன மக்களையும் கவர்ந்துள்ளது. மூதூரில் அக்ஷ்ன் பேம் எனப்படும் பிரன்ஸை தளமாகக் கொண்டு இயங்கு அரச சார்பற்ற நிறுவத்தின் தொழிலாளிகள் 17 பேர் கொல்லப்பட்டதை தமிழர்கள் அவ்வளவு சீக்கிரம் மறந்திருக்கமாட்டார்கள். இவர்கள் அனைவரையும் இலங்கை இராணுவமே துடிக்கத் துடிக்க கொலைசெய்தது. இதனை சர்வதேசம் விசாரிக்கவேண்டும் என அப்போது கோரிக்கை விடுக்கப்பட்டது. முதல் கட்ட விசாரணையின்போது, இலங்கை இராணுவமே இவர்களை கொன்றது எனத் தெரியவந்தது.
இருப்பினும் இவ்விசாரணையை இலங்கை அரசு கிடப்பில் போட்டதோடு பழியை விடுதலைப் புலிகள் மீது சுமத்தியது. ஆண்டுகள் பல கடந்தாலும் இந்த தன்னார்வ தொண்டு நிறுவனம் கொல்லப்பட்ட தமிழர்களை மறந்துவிடவில்லை. இதற்காக சர்வதேச விசாரணை நடைபெறவேண்டும் என்ற கையெழுத்துவேட்டையை அது ஆரம்பித்துள்ளது. அதற்காக ஒரு குறும்படத்தை தயாரித்துள்ளது. மிகவும் சுருக்கமாக கிராபிக்கில் எடுக்கப்பட்ட இப் படத்தை பாருங்கள். இறுதியில் அது உங்கள் கையெழுத்தை வேண்டி நிற்கும். முடிந்தவரை அதனை இட்டு உதவி புரியுங்கள் தமிழர்களே.
Geen opmerkingen:
Een reactie posten