தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 18 oktober 2012

படுகொலைக்குப் பொறுப்பேற்ற பிரான்ஸ் அரசு. (வீடியோ) !!


படுகொலைக்குப் பொறுப்பேற்ற பிரான்ஸ் அரசு. (வீடியோ) !!
அல்ஜீரிய யுத்தம் நடந்து ஐந்து மாதங்களே ஆகியிருந்தன. 17 ஒக்டோபர் 1961ம் ஆண்டு பல்லாயிரக் கணக்கான அல்ஜீரிய மக்கள், அவர்களைக் குறிவைத்து ஏற்படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டத்தை எதிர்த்து பரிசில் பேரணி ஒன்றை நடாத்தினார்கள். இது தேசிய விடுதலை முன்னணியால் (Front de libération nationale (FLN) ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இப்பேரணி Seine காவற்துறை மாஅதிபர் Maurice Papon இன் அடக்கு முறைகளைக் கண்டித்தும் நடாத்தப்பட்டது.




இப்பேரணி மீது திடீரெனக் காவற்துறையினர் துப்பாக்கிப் பிரயோகம் நடாத்தினார்கள். நூற்றுக் கணக்கான அல்ஜீரிய மக்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். சுட்டுக் கொல்லப்பட்டவர்கள் போகப் பலர் கோடரிப் பிடிகளாலும் துப்பாக்கிப் பிடிகளாலும் அடித்துத் தலை சிதறடிக்கப்ட்டுக் கொல்லப்பட்டார்கள். கொல்ப்பட்டவர்கள் Seine நதியில் தூக்கி வீசப்பட்டார்கள். பரிசில் ஒரு படுகொலை நடந்தேறியது.









51 வருடங்களின் பின்னர் திங்கட்கிழமை சோசலிசக் கட்சி இந்தப் படுபொலைக்குப் பிரான்ஸ் அரசு அதிகாரபூர்வமாகப் பொறுப்பேற்க வேண்டும் எனக் கோரியிருந்தனர். 2001 ஒக்டோபர் 17இல் பிரான்சுவா ஒல்லாந்த் ஜனாதிபதி வேட்பாளராக இருக்கையில் Asnières (Hauts-de-Seine) இல் இத் துயர நாளின் நினைவு கூறலுக்குச் சென்றிருந்தார். அங்கு இழப்புக்களைச் சந்தித்திருந்த குடும்பங்களைச் சந்தித்துத் தனது ஆறுதலைக் கூறியிருந்தார். அங்கு « இந்தச் சம்பவம் நீண்ட நெடுங்காலமாக வரலாற்றில் மூலையில் போடப்பட்டள்ளது. இது நினைவு படுத்தப்படல் வேண்டும் » என்றும் கூறியிருந்தார்.


பல ஆண்டு காலம் மத்தியதரைக் கடலின் இரு பக்கங்களும் காத்திருந்த ஒரு விடயத்தை ஜனாதிபதி மாளிகையின் அறிக்கையில் நேற்று 17ம் திகதி பிரான்சுவா ஒல்வோந்த் வெளியிட்டுள்ளார். « இந்தக் குடியரசு நடந்த சம்பவத்தைப் பொறுப்புடன் ஏற்றுக்கொள்கின்றது » என்று கூறி நடந்த படுகொலையைப் பிரான்ஸ் அரசாங்கம் பொறுப்பேற்றுள்ளது. « இரத்தக்களறி அக்குமுறை 17 ஒக்டோபர் 1961ம் ஆண்டு அன்று அல்ஜீரிய மக்கள் மீது மேற்கொள்ளப்பட்டது » என்று அந்த அறிக்கை பொறுப்பேற்றுள்ளது.






அல்ஜீரியப் பிரதமர் Abdelmalek Sellal பிரான்சின் இநத அறிக்கை;குத் தலைவணங்கியுள்ளார். பிரான்சின் இந்த நல்லெண்ண முயற்சி பாராட்டுக்குரியது என்று கூறியுள்ளார். அல்ஜீரிய சரித்திரத்தின் வல்லுநர் Benjamin Stora, 'நீண்டகாலமாக அல்ஜீரிய மக்கள் காத்திருந்தது நடந்துள்ளது' என்று தெரிவித்துள்ளார். இடது சாரி முன்னணியைச் சார்ந்த François Asensi (Front de gauche) பாராளுமன்றத்தில் ஐரோப்பிய விவாதத்தில் இதற்கு ஆதரவாக அறிக்கை சமர்ப்பித்தார். அல்ஜீரிய நட்பு மக்களின் நட்பைப் பேண இந்த அறிக்கை ஒரு சிறந்த சைகையாய் இருக்கும் என்றும் இதைக் கம்யுனிசக் கட்சியின் சார்பில் ஆதரிப்பதாகவும் தெரிவித்திருந்தார்.




ஆனாலும் வலது சாரிக் கட்சியான UMP கு »டியரசின் காவற்துறையினரையும் குடியரசையும் குற்றம் சாட்டியிருப்பது ஏற்றுக் கொள்ளமுடியாதது. பிரான்சின் கடினமான காலங்களில் நடந்தவற்றை பிரான்சுவா ஒல்லோந்த் சரித்திர அரசியலாக்க முனைகின்றார் » என்று UMP யின் பாராளுமன்ற உறுப்பினர் Christian Jacob கொதித்துள்ளார்.


எனினும் நடந்த ஒரு கொடூரப் படுகொலை காலம் கடந்தாகிலும் ஒரு பெரிய குடியரசால் ஏற்றுக் கொள்ளப்பட்டிருப்பது பிரான்சுவா ஒல்லோந்தின் சிறந்த செய்கையாகும். எத்தனை காலமானாலும் படுகொலைகளுக்கான நீதி கிடைப்தே ஒரு இனத்திற்குக் கிடைக்கும் முழுமையான சமரசமாகும்.




Geen opmerkingen:

Een reactie posten