தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 26 oktober 2012

இலங்கையில் கோத்தபாய ராஜபக்ச ஊடகவியலாளர்களை அச்சுறுத்தி வருவது அம்பலம்! விக்கிலீக்ஸ்


இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, ஊடகவியலாளர்களை அச்சுறுத்தி வருவது தொடர்பில் அமெரிக்க இராஜாங்க திணைக்களத்துக்கு அமெரிக்க தூதரகம் தகவல் அளித்து வந்துள்ளது. இது விக்கிலீக்ஸ் இணையம் மூலம் கசிந்துள்ளது.
கோத்தபாய ராஜபக்ச, டெய்லி மிரர் ஆசிரியரை அழைத்து அவர் கருணாவை பற்றி எழுதியமைக்காக அச்சுறுத்தியுள்ளார்.
இதன் பின்னர் தாம் குறித்த ஆசிரியரை அச்சுறுத்தியதை ஏற்றுக்கொண்ட கோத்தபாய, தொடர்ந்தும் கருணாவை பற்றி எழுதினால், தாம் குறித்த ஆசிரியருக்கு எதிரியாக மாறவேண்டியிருக்கும் என்று எச்சரித்ததாக அமெரிக்க தூதரகம் குறிப்பிட்டிருந்தது.
இதேவேளை, இலங்கையில் 100 வீதமான அரச எதிர் ஊடகவியலாளர்களும் எதிர்க்கட்சிக்கு ஆதரவான ஊடகவியலாளர்களும் உள்ளதாக கோத்தபாய குறிப்பிட்டுள்ளதாகவும் அமெரிக்க தூதரகம் தெரிவித்திருந்தது.

Geen opmerkingen:

Een reactie posten