தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 2 oktober 2012

புகலிடம் நாடுவோரின் சட்டங்கள் குறித்து கிண்டல் செய்த ஆம்னெஸ்ட்டி அமைப்பு(வீடியோ இணைப்பு)

சுவிட்சர்லாந்தில் உள்ள ஆம்னெஸ்ட்டி இண்ட்ர்நேஷனல் என்ற பொதுநல அமைப்பு இந்நாட்டில் புகலிடம் நாடுவோருக்கான சட்டங்கள் கடுமையாக்கப்பட்டிருப்பதைக் கேலியும் கிண்டலுமாக விமர்சித்துள்ளது.
இந்தப் பொதுநல அமைப்பு புகலிடம் நாடி வருவோரிடம் சுவிஸ் மக்கள் கட்சியின் அரசியல்வாதிகள் மனிதாபிமானமற்ற முறையில் நடந்து கொள்ளத் தேவையான சட்டங்களை அறிமுகப்படுவதைக் கிண்டல் மூலமாகக் கண்டித்துள்ளது.
ஆம்னெஸ்ட்டி இண்டர்நேஷனல் தனது இணையதளத்தில் ஒரு படத்தைப் பதிவு செய்தது.
அந்தப்படத்தில் சுவிஸ் மக்கள் கட்சியின் முக்கியத் தலைவரான கிறிஸ்டோபர் புளோக்கரும், மத்தியமைச்சரான உவேலி மாராடும் சோமாலிய அகதிகளாக, அழுக்குப்பிடித்த குடிசைக்கு வெளியே உட்கார்ந்திருக்கின்றனர்.
அவர்கள் பக்கத்தில் "சூப்" நிறைந்த கலயம் இருக்கிறது. அந்தக் கலயத்தில், அதிர்ஷ்ட விலங்காகக் கருதப்படும் Zottel என்ற ஆட்டின் கொம்புகள் மட்டுமின்றி மிஞ்சி இருக்கின்றன.
மாரர், புளோக்கரிடம், "எனக்கும் பசிக்கிறது" என்கிறார். அதற்கு புளோக்கர், "இருந்தாலும் நாம் நம்முடைய அதிர்ஷ்ட விலங்களை (மஸ்கோட்) தின்னக்கூடாது என்கிறார்.
இந்தப் படம், சுவிஸ் மக்கள் கட்சியின் அரசியல்வாதிகள், அகதிகளைச் சிரமத்திற்குள்ளாக்கும் சட்டங்களை ஆதரிப்பதால் தனித்து விடப்பட்டிருப்பதாகக் காட்டுகிறது.
இந்தப் படத்தின் கடைசியில் ஓர் அசரீரி கேட்கிறது. அது, அடுத்த பிறவியில் இவர்கள் சோமாலியராகப் பிறந்த பின்பு, புகலிடம் நாடுவோரின் சட்டங்களைக் கடுமையாக்க ஆதரவளித்தவர்கள் மகிழ்ச்சியடைவார்கள் என்கிறது.
அகதிகளாக வருவோரிடம் அன்பு காட்டாமல் கடுமை காட்டவேண்டாம் என்பதை இந்தப்படமும் வசனமும் நகைச்சுவையோடு உணர்த்துகின்றன.
இது குறித்து ஆம்னெஸ்டி திங்களன்று வெளியிட்ட செய்தி அறிக்கையில், புகலிடம் நாடி வருவோரிடம் அனுதாபம் காட்டவும் அவர்களைப் புரிந்து கொள்ளவும் தன்னுடைய இந்தப் பிரசாரபடம் உதவும் என்று குறிப்பிட்டுள்ளது.
இந்த மாதக் கடைசி வரை ஆம்னெஸ்ட்டி போன்ற வேறு பல அமைப்புகளும் புகலிடம் நாடுவோருக்கான சட்டங்களைக் கடுமையாக்க வேண்டாம் என்று பிரசாரங்கள் செய்து வருகின்றன.

Geen opmerkingen:

Een reactie posten